வெள்ள அபாயம் விடுக்கும் அளவுக்கு தண்ணீரை வைத்துக் கொண்டுதான் விளையாடியதா கர்நாடகா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கபினி அணையில் தேங்கியிருக்கும் தண்ணீரால் மைசூர் மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் வகையில், அளவுக்கு அதிகமான தண்ணீரை வைத்துக் கொண்டுதான் தமிழகத்திற்கு திறந்துவிடாமல் கர்நாடகா அரசு விளையாடியதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கபினி அணை உள்ளிட்ட கர்நாடகா அணைகளில் நாளுக்கு நாள் நீரின் அளவு அதிகரித்துக் கொண்டே இருந்தது.

kabini Dam

கர்நாடகா அணைகளில் தண்ணீர் இருந்தாலும் மாநில அரசு தண்ணீரை திறந்துவிடாமல் ஏமாற்றி வந்தது. கடந்த சில தினங்களாக அணைகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமான நீர் தேங்கியிருந்தது.

ஆனால் முதல்வர் டி.கே.சிவக்குமார், நீர் இல்லை, எங்களுக்கே போதாது என புலம்பி கொண்டிருந்தார். குறிப்பாக தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் காலங்களில் கர்நாடகா தனது பகுதிகளில் உள்ள அணைகளை முழுமையாக நிரப்பும் வரை தமிழகத்திற்குரிய தண்ணீரை கொடுக்க மறுத்து வருகிறது.

பின்னர் அணைகள் நிரம்பி கரைகள் உடைந்து கர்நாடகத்தில் வெள்ள பெருக்கு அபாயம் ஏற்படும் நிலையில் தண்ணீரை திறக்கும். இது வாடிக்கையாகவே நடந்து வருகிறது.

அந்த வகையில் மைசூர் மலை பகுதிகளில் உள்ள கபினி அணையின் நீர் மட்டம் 2,284 அடியாகும். தற்போது அதன் நீர்மட்டம் 2,280 அடியாக உள்ளது. அதாவது முழு அளவை எட்ட இன்னும் 4 அடிகளே குறைவாக உள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கபினி அணைக்கு நீர் வரத்து 30 ஆயிரம் முதல் 45 ஆயிரம் கனஅடியாக உயர்ந்து வருகிறது. அது போல் மைசூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் மைசூர் டூ நஞ்சன்கூட் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மைசூர் மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது போல் கபினி நதிக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அது போல் காவிரி நீர் பிடிப்பு பகுதியான குடகு பகுதியில் இருந்து கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்) அணைக்கும் நீர் வரத்து அதிகமாகவே வருகிறது.

இன்றைய நிலவரப்படி ஹேமாவதி அணையில் அதிகபட்ச நீரின் அளவு 117 அடியாக இருக்கும் நிலையில் தற்போது 100 அடி நீர் உள்ளது. அது போல் கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்டம் 124 அடியாக உள்ள நிலையில் தற்போது 91 அடி நீர் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.

இப்படி கர்நாடகா அணைகளில் அளவுக்கு அதிகமான தண்ணீரை தேக்கி வைத்துக் கொண்டு அந்த மாநில அரசு தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட மறுக்கிறது.

இன்றைய தினம் கபினி அணையை பார்வையிட கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் மைசூர் சென்ற நிலையில் "கர்நாடகாவில் அணைகள் எல்லாம் நிரம்பி வருகிறது. இப்போது நீரை தேக்கி வைக்கக் கூடாது. அப்படி தேக்கி வைத்தால் நாம் அனைவரையும் அடித்துச் சென்றுவிடும்" என தெரிவித்துள்ளார்.

ஆக, தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விடும் அளவுக்கு அணைகளில் தண்ணீர் இருந்த போதிலும், அரசியல் காரணங்களுக்காக அதை தமிழகத்திற்கு திறந்துவிடாமல் வெள்ள அபாய எச்சரிக்கை ஏற்படும் அளவுக்கு அந்த பகுதி மக்களின் உயிர்களுடன் கர்நாடகா அரசு விளையாடியதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது போல் வெள்ள அபாய காலங்களில் தண்ணீரை திறந்துவிடும் கர்நாடகா அரசு, நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்ணீரை திறந்து விடாமல் கரை உடைந்துவிடக் கூடாது என்பதற்காக தண்ணீரை திறந்து அதையும் காவிரி மேலாண்மை ஆணையத்தில் கணக்கு காட்டி விடுகிறது. அடுத்த மாதம் தண்ணீர் திறப்பது குறித்து கேட்டால் இந்த வெள்ள அபாயத்தில் திறந்துவிட்ட தண்ணீரை சுட்டி காட்டிவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+