உடலுறவு பண்ணலாமா? இளம்பெண்ணிடம் தவறாக பேசிய ‘ரேபிடோ' டிரைவர்.. பெங்களூரில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் 'ரேபிடோ' முன்பதிவு செய்தார். 'ரேபிடோ' டிரைவர் அந்த பெண்ணிடம் உடலுறவுக்கு ரெடியா? என்று கேட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

is-s-x-available-bengaluru-rapido-rider-seeks-favour-from-young-woman

பெங்களூரில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அந்த பெண் பேசியதாவது: ''நான் இந்த வீடியோ வெளியிட்டு இருப்பது ஒரு 'ரேபிடோ கால்' விஷயம் தொடர்பானது. இந்த கால் ரெக்கார்ட்டிங்கை முதலில் கேட்டு வாருங்கள்'' என்று கூறுகிறார்.

அதன்பிறகு போனில் அந்த இளம்பெண்ணும், ரேபிடோ டிரைவரும் உரையாடிய போன் கால் ரெக்கார்ட்டிங் வருகிறது. அதில் இளம்பெண், ''ஐஸ்வர்யா லே-அவுட் வந்துட்டீங்களா.. வந்துவிட்டால் என்னிடம் தகவல் சொல்ல வேண்டும் அல்லவா? போன் செய்து இருக்க வேண்டும் அல்லவா?'' என கேட்கிறார்.

அதற்கு அந்த ரேபிடோ டிரைவர், ''உடலுறவு வைக்க வாய்ப்பு இருக்கா?'' என்று கேட்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் மீண்டும் மீண்டும் ''என்ன சொன்னீர்கள்? என்ன சொன்னீர்கள்?'' என கேட்கிறார். அதற்கு அந்த ரேபிடோ டிரைவர் மீண்டும் ''உடலுறவு வைக்க வாய்ப்பு இருக்கா?'' என கேட்கிறார். இந்த ஆடியோவை தான் இளம்பெண் கண்ணீர் மல்க பகிர்ந்துள்ளார்.

மேலும் அந்த பெண் தொடர்ந்து பேசுகையில், ''என்னுடைய வீட்டில் யாரும் இல்லை. இதனால் வெளியே செல்வதற்காக ரேபிடோ முன்பதிவு செய்தேன். லோகேஷன் வந்தாலும் கூட போன் செய்யவில்லை. போன் உள்ளே இருந்ததால் மெசேஜ் அனுப்பியதையும் நான் பார்க்கவில்லை. போன் வரவில்லையே என செக் செய்தபோது அவர் லோகேஷன் வந்ததும், செல்போனில் மெசேஜ் அனுப்பியதும் தெரியவந்தது.

இதனால் நான் லோகேஷன் வந்ததை ஏன் சொல்லவில்லை என்று கேட்டபோது தான் இப்படி மோசமான வார்த்தைகளை பேசி உள்ளார். இதுபோன்ற நபர்களால் ரேபிடோவில் பணியாற்றும் மற்றவர்களுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. கல்லூரி படிக்கும் மாணவர்கள் சம்பளத்திற்காக ரேபிடோ ஓட்டும்போது இதுபோன்ற நபர்களால் மக்களுக்கு அச்சம் ஏற்படும். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

அதுமட்டுமின்றி நான் சொல்வது என்னவென்றால் பெண்கள் பைக் ரேபிடோ முன்பதிவு செய்யாதீர்கள். ரேபிடோ ஆட்டோ, ரேபிடோ கார் முன்பதிவு செய்து பயணியுங்கள். அப்போதும் உஷாராக இருங்கள்'' என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+