மங்களூர் ஆட்டோ வெடிப்பு! தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு? காட்டிக் கொடுத்த டவர் லொகேஷன்கள்! பரபர
பெங்களூர்: கர்நாடகாவில் மங்களூர் வெடி விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து சில பரபர தகவல்கள் வெளியாகி உள்ளது.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் தொடர்ந்து சர்ச்சை சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது. அதிலும் குறிப்பாகக் கர்நாடக கடலோர மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன.
இந்தச் சூழலில் நேற்றைய தினம் கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஓடும் ஆட்டோ வெடித்துச் சிதறியுள்ளது. இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா ஆட்டோ
கர்நாடகாவின் மங்களூரில் நேற்று மாலை ஓடும் ஆட்டோவில் திடீரென வெடித்துச் சிதறியது. முதலில் பலரும் எதிர்பாராத விதமாக நடந்த தீ விபத்து என்றே நினைத்தார்கள். விபத்து எப்படி நடந்தது என்று முதலில் யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த விபத்தில் ஓட்டுநரும் உள்ளே இருந்த பயணியும் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் இருவருக்கும் மோசமான காயம் ஏற்பட்டு உள்ளதால் அவர்களால் பேச முடியாத சூழல் உள்ளது.

வெடித்து சிதறியது
இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளும் கூட இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் அங்குப் பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து சம்பவ இடத்தில் போலீசார் பலர் குவிக்கப்பட்ட நிலையில், மக்களை அமைதி காக்குமாறும் போலீசார் கோரிக்கை விடுத்தனர். மறுபுறம் விபத்து தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், "நேற்று நடந்த ஆட்டோ வெடிப்பு எதிர்பாராத விதமாக நடந்த வெடி விபத்து இல்லை.. கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடந்த 'பயங்கரவாதச் செயல்" என்று கர்நாடக டிஜிபி பரிவீன் சூட் தெரிவித்தார்.

பயங்கரவாத செயல்
இது குறித்து கர்நாடக போலீசார் மத்திய விசாரணை அமைப்புகளுடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இது தொடர்பாக சில கூடுதல் தகவல்களைக் கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "இந்த குண்டுவெடிப்பில் காயம் அடைந்த நபர் இன்னும் பேசும் நிலைக்கு வரவில்லை. அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம். போலீசார் அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் இது பயங்கரவாத தாக்குதல் போலவே இருக்கிறது.

குக்கர்
ஆட்டோ விபத்து தொடர்பாக நாங்கள் மத்திய பாதுகாப்பு நிறுவனங்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் விரைந்து ஒரு குழுவை மங்களூருவுக்கு அனுப்பியுள்ளனர். அடுத்து ஓரிரு நாட்களில் இந்தச் சம்பவம் குறித்த உறுதியான தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று அவர் தெரிவித்தார். வெடி விபத்து ஏற்பட்ட அந்த ஆட்டோவில் குக்கர் ஒன்று மீட்கப்பட்டு உள்ளது. மேலும், அதில் சில பேட்டரிக்களும் மீட்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது குக்கர் வெடிகுண்டு தாக்குதல் முயற்சியாக இருக்கலாம் என்றும் சிலர் சந்தேகம் தெரிவித்து உள்ளனர்,

போலி ஆதார்
இந்தச் சூழலில் போலீஸ் அதிகாரிகள் சிலர் கூறுகையில், "அந்த பயணியிடம் ஆதார் அட்டை ஒன்று இருந்தது. அந்த தகவலை வைத்துப் பார்க்கும் போது, அவர் ஹுப்பாலியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆதாரில் இருந்த ஃபோட்டோ கூட விபத்தில் இருந்தவரை போலவே இருந்தது. ஆனால், உண்மையில் அந்த ஆதார் அட்டை அவருடையது இல்லை. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போதே, அவர்கள் ஏதோ மோசமான விஷயத்தைத் திட்டமிட்டு உள்ளது தெளிவாகத் தெரிகிறது. அதேபோல கோவை வெடிப்பு சம்பவத்திற்கும் இதற்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்.

தமிழகம்- கோவை
ஏதோ ஒரு இடத்தில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு இருந்து உள்ளனர். இருப்பினும், எந்த இடத்தை தாக்குதல் நடத்தக் குறிவைத்து இருந்தார்கள் என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. அந்த நபர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் தான். இருப்பினும், அவர் சமீப மாதங்களில் வெளி மாநிலங்களுக்குச் சென்றுள்ளார். அதிலும் குறிப்பாகச் சமீபத்தில் கோவை மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளுக்கு அவர் பயணம் செய்துள்ளார். அது குறைந்த ஆற்றல் கொண்ட வெடிகுண்டு ஆகும்.. அவர் எங்குச் சென்று கொண்டிருந்தார். அவரது திட்டம் என்ன என்பது குறித்து எங்களுக்கு இன்னும் தெளிவாக எதுவும் தெரியவில்லை" என்றார்.

சிம் கார்ட்
இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய விசாணை அமைப்புகளும் கூட தீவிர விசாரணையில் இறங்கி உள்ளது. வெடிப்பு சம்பவத்தில் சந்தேகத்திற்கிடமான நபர் பொய்யான பெயரில் சிம் கார்டு வாங்கி உள்ளதையும் அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர். அதிலும் கோவையில் தான் இந்த போலி சிம் கார்டை வாங்கியுள்ளார். இது தொடர்பாக அதிகாரிகள் சிலர் கூறுகையில், "அவரது டவர் லொகேஷன்கள் அவர் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்தார் என்பதைக் காட்டுகிறது. அதேபோல தமிழ்நாட்டு எண்களுக்கு அவர் காலும் செய்துள்ளார். அவர் கால் செய்த எண்களை ஆய்வு செய்து வருகிறோம். அதை வைத்து தமிழ்நாட்டில் அவருக்கு இருக்கும் கூட்டாளிகளைக் கண்டறியும் முயற்சியில் இறங்கி உள்ளோம்" என்றார்.

ஊதவை நபரிடம் விசாரணை
இதற்கிடையே இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக உதைக்கையைச் சேர்ந்த சுரேந்திர் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் தான் வெடி விபத்திற்குக் காரணமாக இருந்த நபருக்கு சிம் கார்டு வாங்கி கொடுத்தாக புகார் எழுந்த நிலையில், அவரிடம் இப்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோவை வெடிப்பு சம்பவத்தால் ஏற்பட்ட பதற்றம் ஓய்வதற்குள்ள மற்றொரு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பைக் கிளப்பி உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications