நான் அல்லது வேற ஒருத்தர்.. டிகே சிவகுமாருக்கு தர கூடாது! சித்தராமையா சொன்னதும்.. ஒரு பிளேட் தோசையும்
பெங்களூர்: கர்நாடகாவில் சித்தராமையாவிற்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட்டதற்கு பின் என்ன நடந்தது.. சித்தராமையா வைத்த வாதங்கள் என்னென்ன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகாவின் முதல்வராக சித்தராமையா அந்த கட்சி சார்பாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். துணை முதல்வராக டிகே சிவக்குமார் தேர்வாகி இருக்கிறார். இவர்கள் வரும் சனிக்கிழமை பதவி ஏற்க உள்ளனர்.

இதில் சித்தராமையாவை முதல்வராக தேர்வு செய்வதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
அவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, கேசி வேணுகோபால் ஆகியோரிடம் சொன்ன சில விஷயங்கள்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.,
சர்வே:சித்தராமையா சர்வே ரிசல்ட் ஒன்றை இவர்களிடம் காட்டி.. எனக்குத்தான் முதல்வர் ஆவதற்கான அப்ரூவல் ரேட்டிங் அதிகம் உள்ளது. டிகேஎஸ்ஸை விட எனக்கு 10% பேர் அதிகமாக ஆதரவு கொடுக்கிறார்கள். அதேபோல் அஹின்டா.. அதாவது மைனாரிட்டி, தலித், பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் எல்லாம் எனக்கு ஆதரவு தருகின்றன.
டிகே சிவக்குமாரை கொண்டு வந்தால் இவர்கள் அதிர்ச்சி அடைவார்கள். 2024 தேர்தலில் அது எதிரொலிக்கும்.
டிகே சிவக்குமார் வந்தால்.. வெளியே பார்க்க இமேஜ் இருந்தால் வொக்கலிகா தவிர 2024ல் வேறு யாரும் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள், என்று சித்தராமையா கூறியுள்ளார்.

எம்எல்ஏ சப்போர்ட்:மேலும் தனக்குத்தான் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக சித்தராமையா கூறியுள்ளார். அதேபோல் எம்எல்ஏக்கள் அளித்த ரகசிய வாக்கிலும் சித்தராமையா 90 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளார்.
இதற்கு மேலும் என்னை தேர்வு செய்யவில்லை என்றால் நான் ஓய்வு பெறுவேன்.. கட்சியில் பிரச்சனை செய்ய மாட்டேன்.. ஆனால் மைனாரிட்டி, தலித், பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளை பெறுவது உங்கள் திறமை என்று சித்தராமையா கூறியுள்ளார்.
வழக்குகள்:மேலும் டிகே சிவகுமாருக்கு எதிராக நிறைய வழக்குகள் உள்ளன. அவர் முதல்வர் ஆனால் உடனே உள்ளே தள்ளி அவரை தகுதி நீக்கம் செய்வார்கள். அது நமக்குத்தான் அசிங்கம். அதற்கு பின் என்னிடம் வந்தால் நான் முதல்வராக மாட்டேன்.
நாம் தலைவர் இன்றி பாஜக மாதிரி ஆகிவிடுவோம். காங்கிரசை அது மோசமான நிலைக்கு கொண்டு செல்லும். நான் பதவிக்கு ஆசைப்பட்டு சொல்லவில்லை. எனக்கு பதவி கொடுங்கள். அல்லது என்னை பிடிக்கவில்லை என்றால் வேறு ஒருவரை முதல்வராக்குங்கள்.
ஆனால் டிகே சிவக்குமாரை ஆக்கினால்.. வழக்குகளை காரணம் காட்டி அவர் முதல்வர் ஆனால் உடனே உள்ளே தள்ளி அவரை தகுதி நீக்கம் செய்வார்கள், என்று சித்தராமையா மிரட்டி இருக்கிறார்.
அவர் வைத்த இந்த வாதங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டுதான் இறுதியில் சித்தராமையாவை தேர்வு செய்துள்ளனர்.

போன் கால் - சோனியா:சோனியா காந்திதான் இந்த விவகாரத்தில் நேற்று மாலை தலையிட்டு இருக்கிறார். அவர் பேசிய பின்பே டிகே சிவக்குமார் துணை முதல்வராக இருக்க ஒப்புக்கொண்டுள்ளார். அவர் கொடுத்த சில வாக்குறுதிகளை டிகே சிவக்குமார் ஏற்றுக்கொண்டார்.
அதோடு டிகே சிவகுமாருக்கு 4 பெரிய துறைகள் மொத்தமாக அமைச்சரவையில் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அவருடைய ஆதரவாளர்களுக்கு முக்கிய அமைச்சர்கள் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கார்கே, கே சி வேணுகோபால் ஆகியோர் பேசியும் இறங்கி வராத டிகே சிவக்குமார் சோனியா காந்தி பேசிய பின்பே இறங்கி வந்ததாக கூறப்படுகிறது.

கை நனைத்தனர்:இந்த விவகாரம் சுமுகமாக முடிந்த பின்.. விட்டுக்கொடுத்த டிகே சிவக்குமார்.. சித்தராமையாவுடன் சேர்ந்து சாப்பிட்டு இருக்கிறார். அவர்கள் ஒன்றாக தோசை, வடை, இட்லி என்று கை நனைத்து.. பிரச்னையை தீர்த்துக்கொண்டனர்.
கட்சியை மிரட்டாமல்.. கட்சிக்காக வேலை செய்து.. முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்த போதும்.. சிரித்தபடி பேசிய டிகே சிவக்குமாரின் நடத்தை அங்கே காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications