கர்நாடகாவில் முந்தும் பாஜக! பின்னாலேயே நெருங்கும் காங்.! கடும் போட்டி தான்- ஜன்கிபாத் எக்ஸிட் போல்
பெங்களூர்: கர்நாடகாவில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் ஜன்கிபாத் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் இன்று சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அங்கே மொத்தம் 224 தொகுதிகள் இருக்கும் நிலையில், பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையே இருக்கிறது.

அங்கே பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இடையில் பல தொகுதிகளில் மஜத கட்சியும் மல்லுக்கட்டுகிறது. இதனால் அங்கு மும்முனை போட்டி .
தென் இந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா என்பதால் அங்கே ஆட்சியைத் தக்க வைக்க பாஜக கடுமையாக முயல்கிறது. அதேநேரம் ஊழல் குற்றச்சாட்டுகளால் மாநில பாஜக அரசு மீது கடும் அதிருப்தி இருப்பதால் எளிதாக வெல்வோம் என்று காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகத் தொடங்கியுள்ளது.
இதில் ஜன்கிபாத் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் நெருக்கமான போட்டி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதில் பாஜக 94-117 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து காங்கிரஸ் 91-106 இடங்களைக் கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல மஜத 14-24 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 0-2 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல அவர்கள் ஒவ்வொரு கட்சியும் பெறும் வாக்கு சதவிகிதம் குறித்த தகவல்களையும் பகிர்ந்துள்ளனர். அதன்படி காங்கிரஸ் 38%-40% சதவிகித வாக்குகளையும் பாஜக 37.5%- 39% சதவிகித வாக்குகளையும் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது காங்கிரஸ் கட்சிக்கு 0.5% முதல் ஒரு சதவிகிதம் வரை கூடுதலாக வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்து மாநிலக் கட்சியாக இருக்கும் ஜேடிஎஸ் கட்சிக்கு 14%-17% சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதர கட்சிகளும் சுயேச்சைகளும் சேர்ந்து 8.5%-6% சதவிகித வாக்குகளைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஜன்கி பாத் கருத்துக் கணிப்பில் பிராந்தியம் வாரியான கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி ஹைதராபாத் கர்நாடகா பகுதியில் பாஜக 15 இடங்களிலும் காங்கிரஸ் 24 இடங்களிலும் வெல்லும். இங்கே ஜேடிஎஸ்-1 இடத்தில் மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.
மும்பை கர்நாடகா பிராந்தியத்தில் பாஜக 31 இடங்களிலும் காங்கிரஸ் 19 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. பெங்களூருவில் பாஜக 17 இடங்களிலும் காங்கிரஸ் 15 இடங்களிலும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த இரு பிராந்தியத்தில் ஜேடிஎஸ் கட்சி ஒரு இடத்திலும் வெல்லாது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய மைசூருவில் பாஜக 15, காங்கிரஸ் 24, ஜேடிஎஸ் 16 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. இதர 2 இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய மைசூரு என்பது ஜேடிஎஸ் வலுவாக உள்ள பிராந்தியம் ஆகும்.
அதேபோல பாஜக வலுவாக உள்ள கடலோர கர்நாடகாவில் பாஜக 15 இடங்களை கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது. அங்கே காங்கிரசுக்கு 4 இடங்கள் மட்டுமே கிடைக்கும். மத்திய கர்நாடகாவில் பாஜக- 13, காங்கிரஸ் 11, ஜேடிஎஸ் 2 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications