பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊரெல்லாம் போலீஸ் தேடியபோது, வக்கீல் காரை ஹாயாக ஓட்டியபடி வந்து ஆஜரான ஜனார்த்தன ரெட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    ஊரெல்லாம் போலீஸ் தேடியபோது, காரை ஓட்டியபடி வந்து ஆஜரான ஜனார்த்தன ரெட்டி -வீடியோ

    பெங்களூர்: தலைமறைவாக இருந்த ஜனார்த்தன ரெட்டி, பெங்களூரிலுள்ள குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்தில் ஆஜரானார்.

    கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஆம்பிடென்ட் என்ற தனியார் நிதிநிறுவனம், கூடுதல் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்தது.

    அமலாக்கத்துறையினர், ஆம்பிடென்ட் நிறுவன உரிமையாளர் பரீத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும், அந்நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துக்களையும் முடக்கினர்.

    அமலாக்கத்துறையின் வழக்கில் இருந்து பரீத்தை காப்பாற்றுவதற்காக ஜனார்த்தன ரெட்டி உறுதியளித்தார். இதற்காக, இடைத்தரகர் அலிகார் மூலம் 57 கிலோ தங்கத்தை பரீத்திடம் முதற்கட்டமாக இருந்து ஜனார்த்தன் பெற்றார் என்று கூறப்படுகிறது.

    இந்த தகவல் மத்திய குற்றப்பிரிவு போலீசார் (சிசிபி) விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர் தலைமறைவானார். அவரது பெங்களூரு, பல்லாரி வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

    இந்நிலையில், ஜனார்த்தனை கைது செய்யக்கூடாது என்று கோரி அவரது வழக்கறிஞர் ஹனுமன்தாரயா, பெங்களூரு அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு அளித்தார். ஆனால் மனு படித்துப் பார்த்த நீதிபதிகள், ஜனார்த்தனுக்கு முன்ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில், தலைமறைவாக இருந்த ஜனார்த்தன ரெட்டி, பெங்களூரிலுள்ள குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் இன்று மதியம் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. எந்த நேரத்திலும் அவரை கைது செய்ய வாய்ப்புள்ளது.

    ஜனார்த்தன ரெட்டி எங்கேயிருந்தார் என்று தெரியாத நிலையில், அவர் குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு, தனது வழக்கறிஞரின் சுசுகி எர்டிகா காரை ஓட்டியபடி வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    English summary
    Janardhan Reddy reaches Crime Branch office in connection with Ambident Group alleged bribery case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X