பிரஜ்வல் ரேவண்ணா வேணுமா? 19 எம்.எல்.ஏக்களா? போர்க்கொடி! கட்சியை விட்டு நீக்கம்? நாளை அதிரடி முடிவு!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஹாசன் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்க உள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன.

நூற்றுக்கணக்கான பாலியல் வீடியோக்கள் பரவி வரும் நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா நீக்கம் குறித்து நாளை காலை நடைபெறும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மையக்குழு கூட்டத்தில் இதுகுறித்து, கட்சி தலைமையால் அதிரடி முடிவு எடுக்கப்பட்டு, அறிவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

JDS likely to expel Prajwal Revanna tomorrow after core committee meeting

கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். முன்னாள் அமைச்சர் ஹெச்.டி.ரேவண்ணாவின் மகன். கடந்த 26ஆம் தேதி நடந்த மக்களவை இரண்டாம் கட்ட தேர்தலில், பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் மக்களவை தொகுதியிலிருந்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார்.

இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா இடம்பெற்றுள்ள ஆபாச வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் உள்ள பெண், பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் தொந்தரவு புகார் அளித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை தனக்கு பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தொந்தரவு செய்ததாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.

பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஹாசன் மாவட்ட காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மகளிர் ஆணைய தலைவர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் ரேவண்ணா மீதான வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) விசாரணைக்கு ஒப்படைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

லோக்சபா தேர்தலில் பாஜகவுடன், மஜத கூட்டணியில் இருப்பதால் இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி தீவிரமாக கையில் எடுத்திருக்கிறது. நேற்று கர்நாடகாவில் பல இடங்களில் மகளிர் காங்கிரஸ் கட்சியினர் பிரஜ்வலுக்கு எதிராக தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

எஸ்ஐடி விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது, விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டும், யார் தவறு செய்திருந்தாலும், நாட்டின் சட்டத்தின்படி தலைவணங்க வேண்டும். அவரைப் பாதுகாக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக முன்னாள் முதல்வரும் மஜத தலைவருமான குமாரசாமி கூறியுள்ளார்.

பிரஜ்வல் மற்றும் அவரது தந்தை எச்டி ரேவண்ணாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று இன்று காலை ஜேடி(எஸ்) எம்எல்ஏ சமுருத்தி மஞ்சுநாத் வலியுறுத்தினார். ஊடகங்களில் பரவும் வீடியோக்கள் கட்சி தொண்டர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் கட்சித் தலைமை உரிய முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஹாசன் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் ஊடகங்களில் வெளியாகி கட்சி தொண்டர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. 19 எம்.எல்.ஏ.க்கள் முக்கியமா அல்லது எச்.டி.ரேவண்ணாவும் பிரஜ்வல் ரேவண்ணாவும் முக்கியமா என்பதை கட்சி முடிவு செய்ய வேண்டும். ரேவண்ணா, பிரஜ்வலை வெளியேற்ற வேண்டும். கட்சியின் கொள்கைகளை காப்பாற்றவும், சங்கடத்தில் இருந்து எங்களை காப்பாற்றவும் 24 மணி நேரத்திற்குள் கட்சியில் இருந்து விடுங்கள்" என மஞ்சுநாத் கூறியுள்ளார்.

இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மையக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. நாளை காலை நடைபெறும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மையக்குழு கூட்டத்தில், பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியை விட்டு நீக்கும் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+