மருமகள் மாமியார், மாமனாரை கவனிக்கணுமா? "அதுக்கும்" பர்மிஷன் கேட்கணுமா? கணவனை கேட்ட நீதிபதி சுமலதா

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி சுமலதா வழங்கிய தீர்ப்புதான் பலரது கவனத்தையும் இப்போது பெற்றுள்ளது.. பெங்களூருவை உலுக்கிய ஒரு குடும்ப வன்முறை மற்றும் விவாகரத்து வழக்கு தொடர்பான விவகாரத்தில், கர்நாடக உயர் நீதிமன்றம் நீதிபதி மிக முக்கியமான மற்றும் அதிரடியான தீர்ப்பை வழங்கி உள்ளார்.. இந்த வழக்கின் பின்னணி என்ன? நடந்தது? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன? இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

இந்த வழக்கில் மனுதாரரான கணவருக்கு 36 வயது ஆகிறது.. இவர் பெங்களூருவில் கூலித் தொழிலாளியாகப் அதாவது போர்ட்டராக (Porter) வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவிக்கு 33 வயது ஆகிறது. தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இப்போது மனைவி தனது மகளுடன் துமகூரு மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தன் பெற்றோர் வசிக்கும் வீட்டில் தங்கியுள்ளார்.

Justice Sumalatha

கர்நாடகா தம்பதி

இந்த விவகாரத்தில், குடும்ப நல நீதிமன்றம் கடந்த 2025 நவம்பரில் பிறப்பித்த உத்தரவின்படி, கணவர் தனது மனைவிக்கு மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாயும்,சிறுமிக்கு ரூ. 4000-மும் சேர்த்து மொத்தம் ரூ. 9000 ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து கணவர், ஹைகோர்ட்டில் அப்பீலுக்கு போனார்.

அந்த மனுவில், என்னுடைய மனைவி முறையாக வீட்டு வேலைகளை செய்யவில்லை.. என்னுடைய பெற்றோரை கவனித்து கொள்ளவில்லை.. எங்களுடைய அனுமதி பெறாமல், மனைவி அவருடைய பெற்றோர் வீட்டிற்கு அடிக்கடி சென்றுவிடுகிறார்" என்று குற்றஞ்சாட்டியிருந்தார்..

கணவனிடம் பர்மிஷன் வாங்கணுமா

இந்த வாதங்களை கேட்டு, நீதிபதி டாக்டர் சில்லுகூர் சுமலதா கடுமையான கண்டனங்களை தெரிவித்தார். மனைவி தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு செல்வதற்கு, கணவர் அல்லது மாமனார்-மாமியாரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியவில்லை.. ஒரு எஜமானர் தனது ஊழியரை கட்டுப்படுத்துவது போன்ற வக்கிரமான மனநிலையைக் காட்டுகிறது..

மனைவி என்பவர் வீட்டு வேலைகளை மட்டும் செய்வதற்காக நியமிக்கப்பட்டவர் கிடையாது.. பெண்ணின் சுதந்திரத்தைப் பறிக்கும் எந்தவொரு செயலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஆணித்தரமாக நீதிபதி கூறினார்.

மாமனார், மாமியார்

தொடர்ந்து நீதிபதி சில்லுகூர் சுமலதா தன்னுடைய தீர்ப்பில் சொல்லப்பட்ட முக்கிய அம்சங்கள் இதுதான்: "திருமணம் என்பது ஒருவரை அடக்கி ஆளும் உரிமம் அல்ல.. ஒரு பெண் தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதற்கு, அங்கே உள்ள அனைவரிடமும் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்படுகிறது? பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது. ஒரு பெண் தனது விருப்பப்படி பெற்றோர் வீட்டுக்கு செல்வது அவரது அடிப்படை உரிமை.

வீட்டு வேலைகள் ஆணும் பெண்ணும் சமமாகப் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். பெற்றோரை பராமரிப்பது என்பது முதன்மையாக அவர்களின் சொந்த மகன் அல்லது மகளின் பொறுப்பே தவிர, மருமகனுக்கோ அல்லது மருமகளுக்கோ உரிய கடமை அல்ல. மாமனார் மற்றும் மாமியாரைப் பராமரிப்பது என்பது முற்றிலும் ஒரு விருப்ப செயல்பாடாக இருக்க வேண்டுமே தவிர, பலவந்தமாக திணிக்கக் கூடாது.

பெற்றோர் வீட்டுக்கு செல்ல அனுமதி

ஒரு மனைவியின் குடும்பத்திற்கான அர்ப்பணிப்பை எப்போதுமே அவளது கீழ்ப்படிதல் மற்றும் அடங்கிப் போதலைக் கொண்டு அளவிட முடியாது. திருமணம் என்பது இருவரும் சமம் இல்லை என்ற உறவு முறையல்ல. ஒரு பெண்ணின் சுயேச்சையான சுதந்திரத்தை பறிக்க நினைப்பதும், அவர் பெண் என்பதற்காக அவரது உரிமைகளை கட்டுப்படுத்துவதும் நம்முடைய நாட்டின் சட்டங்கள் சொல்லும் சமத்துவம், மனித உரிமை மற்றும் சமூக நீதிக்கு முற்றிலும் எதிரானது.

இப்போதுள்ள விலைவாசிக்கு, பராமரிப்புத் தொகையாக ஒரு நபருக்கு நாளொன்றுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள 150 ரூபாய் என்பது குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை எட்டக்கூட போதுமானதாக இருக்காது" என்று கூறி, கணவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+