கன்னடம் தான் முக்கியம்..அந்தர் பல்டி அடித்த சிவராஜ்குமார்! கமல் பேசியதில் உடன்பாடில்லையாம்..ட்விஸ்ட்
பெங்களூர்: இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் சிம்பு நடித்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் கன்னட மொழி குறித்து அவதூறாக பேசியதாக கமல்ஹாசனுக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம் வெடித்திருக்கிறது. இந்த நிலையில் கன்னட மொழிக்கு தான் தனது முதல் முன்னுரிமை எனக் கூறியிருக்கிறார் நடிகர் சிவ்ராஜ்குமார். இவர் ஏற்கனவே கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன் சிம்பு நடித்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் படத்துக்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு என இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பறந்து ப்ரமோஷன் செய்து வருகிறது பட குழு.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டார்.

அப்போது அவரை குறிப்பிட்டு பேசிய நடிகர் கமல்ஹாசன்," ராஜ்குமார் குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என் குடும்பம். அதன் காரணமாகவே இங்கு வந்திருக்கிறார். அதனால் தான் என் பேச்சை தொடங்கும் போது 'உயிரே உறவே தமிழே' என்று தொடங்கினேன். தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம். அதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்" என பேசினார். கமல்ஹாசனின் பேச்சை ஆமோதிப்பது போல சிவராஜ்குமார் தலையசைத்தார்.
இந்த நிலையில் கன்னட மொழி பேசும் மக்களின் உணர்வுகளை கமல்ஹாசன் புண்படுத்தி விட்டதாக புகார் எழுந்திருக்கிறது. மேலும் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பும் போராட்டத்தில் குதித்துள்ளது. இந்த நிலையில் மன்னிப்பு கேட்க முடியாது என கமல்ஹாசன் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். இதனால் கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
தேவைப்பட்டால் கன்னட மொழிக்காக உயிரையும் கொடுப்பேன் என்று கன்னட பெருமை பேசுவது சரியல்ல. இப்படி பேசுபவர்கள் கன்னட சினிமாவுக்காக என்ன செய்துள்ளீர்கள்? புதிய நபருக்கு வாய்ப்பு கொடுத்தீர்களா? கன்னடம் வளர வேண்டுமென்றால் எல்லா வழியிலும் அதை ஆதரிப்பது கடமையாகும். நான் சொல்வது சரியா தவறா என்பதை உங்களது மனசாட்சியை கேட்டு பாருங்கள். உங்களுக்கு பதில் கிடைக்கும். அதோடு கமல் சார் கன்னட சினிமாவுக்கு நிறைய செய்திருக்கிறார்.
இந்த நிலையில் கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கும் சிக்கல் முளைத்தது. அவர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பேசியதாக சில அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. முன்னதாக கமலின் பேச்சு குறித்து விளக்கம் அளித்து இருந்த சிவராஜ்குமார்," தேவைப்பட்டால் கன்னட மொழிக்காக உயிரையும் கொடுப்பேன் என்று கன்னட பெருமை பேசுவது சரியல்ல. இப்படி பேசுபவர்கள் கன்னட சினிமாவுக்காக என்ன செய்துள்ளீர்கள்? புதிய நபருக்கு வாய்ப்பு கொடுத்தீர்களா? கன்னடம் வளர வேண்டுமென்றால் எல்லா வழியிலும் அதை ஆதரிப்பது கடமையாகும். கமல் சார் கன்னட சினிமாவுக்கு நிறைய செய்திருக்கிறார்." என பேசியிருந்தார்.
இந்த நிலையில் தனது பேச்சிலிருந்து பின்வாங்குவது போல பேசி இருக்கிறார் நடிகர் சிவராஜ்குமார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," கன்னடம்தான் என் முதல் விருப்பம், அதில் எந்த சந்தேகமும் இல்லை... எனக்கு எல்லா மொழிகளும் முக்கியம்.. தாய்மொழியாக கன்னடம்தான் முதன்மையானது. கன்னடத்துக்காக உயிரைக் கொடுக்கவும் தயார். கர்நாடகாவுக்கு எந்தப் பிரச்னை வந்தாலும், முதலில் நிற்பதும் நான் தான்.
நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து பேசியதை நான் சரி என சொல்லவில்லை. கன்னடம் தமிழ் குறித்து அவர் பேசிய போது நான் கைதட்டியது உண்மைதான். ஆனால் அவர் என்ன பேசினார் என தெரியவில்லை. இரண்டாவது முறை கேட்டபோதுதான் எனக்கே தெரிந்தது. அவரது கருத்தில் எனக்கும் உடன்பாடு இல்லை" எனக் கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications