Thug Life ரூ 300 கோடி பட்ஜெட்னா கமல் மன்னிப்பு கேட்கலாமே! சிவராஜ்குமாருக்கும் சிக்கல்! சாடிய நீதிபதி
பெங்களூர்: தக் லைஃப் பட விவகாரத்தில் கன்னட மொழி குறித்து சர்ச்சை கருத்து கூறிய கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சினை எப்போதோ முடிந்திருக்குமே! இவரால் சிவராஜ்குமாருக்கும் பிரச்சினை என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
கமல் நடிப்பில் தக் லைஃப் படம் வரும் ஜூன் 5ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. 38 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசனும் மணிரத்னமும் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் சிம்பு, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, த்ரிஷா, அசோக்செல்வன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசிய போது தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்ற கருத்தை சிவராஜ்குமார் முன்னிலையில் வைத்தார். கமலை சித்தப்பாவாக கருதும் சிவராஜ்குமாரும் , "சித்தப்பா"வின் கருத்துக்கு ஆமோதித்தார்.
இது கர்நாடகாவில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்திவிட்டது. தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியாக வேண்டும் என்றால் கமல்ஹாசன் தான் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னட அமைப்புகள் கேட்டனர்.
ஆனால் கமல்ஹாசனோ அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது என கூறி மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். இதனால் இந்த பிரச்சினை மேலும் பெரிதானது. இந்த நிலையில் தனது பேச்சுக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைஃப் படம் வெளியிட விடமாட்டோம் என கன்னட அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தினர்.
மன்னிப்பு கேட்காமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டர்களை கொளுத்துவோம் என கன்னட அமைப்புகள் மிரட்டியதால் கன்னட சினிமா விநியோகஸ்தர்கள் சங்கமும் இந்த படத்தை வெளியிட மாட்டோம் என தெரிவித்துவிட்டன.
இந்த நிலையில் கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகும் போது தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ராஜ்கமல் இன்டர்நேஷனல் சார்பில் பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, தக் லைஃப் பட இசை வெளியீட்டு விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிவிட்டு மன்னிப்பு கேட்க முடியாது என சொல்கிறீர்கள். ரூ 300 கோடி செலவில் படம் எடுத்துள்ள நீங்கள் மன்னிப்பு கேட்க தயங்குவது ஏன், மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சினை எப்போதே முடிந்திருக்குமே!
தக் லைஃப் படம் கர்நாடகாவில் ஓட வேண்டும், சில கோடி லாபம் பார்க்க வேண்டும் என நினைத்தால் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். நீங்கள் பேசிய கருத்தை திரும்ப பெற முடியாது, மன்னிப்பு ஒன்று தான் தீர்வு. உங்களால் சிவராஜ்குமாருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தார்.
இந்த வழக்கு இன்று 2.30 மணிக்கு விசாரணைக்கு வரும் நிலையில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications