விஜய்க்கு அறிவில்லை.. உதயநிதியை எப்படி கைது செய்யலாம்.. கொந்தளித்த கன்னட நடிகர்.. யார் இந்த சேத்தன்?
பெங்களூர்: ''உதயநிதியின் வார்த்தைகள் அருவருக்கத்தக்கதாவும், கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியதாகவும் இருக்கலாம். ஆனால் ஆனால் அதற்காக கைது நடவடிக்கையா?விஜய்க்கு ஜனநாயகம் என்றால் என்ன? என்பது புரியவில்லை. அறிவற்ற ஒருவரை முதல்வராக்கியதால் தமிழ்நாடு காவல்துறையின் மாநிலமாக மாறி வருகிறது'' என்று கன்னட நடிகர் சேத்தன் அஹிம்சா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். நடிகை திரிஷா பற்றி அவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பிய நிலையில் தஞ்சாவூர் கிழக்கு போலீசார் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர்.
சென்னை நீலாங்கரை வீட்டில் இருந்து உதயநிதி ஸ்டாலினை கைது செய்து தஞ்சாவூர் அழைத்து சென்று விசாரித்தனர். அதன்பிறகு போலீசார் அவரை விடுவித்தனர். இந்த சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உதயநிதி ஸ்டாலினி்ன் கைது நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. உதயநிதியின் கைது என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுக விமர்சனம் செய்தது. அதேவேளையில் அதிமுக உதயநிதியின் பேச்சை கண்டித்தது போல் அவரது கைது நடவடிக்கையையும் கண்டித்தது. பாஜக, தவெகவினர் மட்டுமே அவரது கைதை வரவேற்றனர். மற்றவர்கள் உதயநிதியின் பேச்சு ஏற்கமுடியாது. ஆனால் இவ்வளவு விரைவாக கைது நடவடிக்கை தேவையில்லை என்று கூறினர்.
இதற்கிடையே தான் கன்னட திரைப்பட நடிகர் சேத்தன் அஹிம்சா, உதயநிதியின் கைது நடவடிக்கை தொடர்பாக முதல்வர் விஜய்யை கடுமையாக சாடி உள்ளார். முதல்வர் விஜய்க்கு ஒன்றுமே தெரியாது. அவருக்கு அறிவு இல்லை என்பது போல் கடும் வார்த்தைகளால் சாடியுள்ளார். இதுதொடர்பாக சேத்தன் அஹிம்சா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
''உதயநிதியின் வார்த்தைகள் அருவருக்கத்தக்கதாவும், கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியதாகவும் இருக்கலாம். ஆனால் ஆனால் அதற்காக கைது நடவடிக்கையா? தவெக தலைவர் விஜய்க்கு ஜனநாயகம் என்றால் என்ன? என்பது புரியவில்லை. எதிர்பாளர்களுக்கு எதிராக அரசு இயந்திரத்தையும் காவல் துறையும் ஆயுதமாக்குவதே அவரது தொடர்ச்சியான பாணியாக உள்ளது. கொசுவை கொல்ல அரிவாளா? அறிவற்ற ஒருவரை முதல்வராக்கியதால் தமிழ்நாடு காவல்துறையின் மாநிலமாக மாறி வருகிறது'' என்று விமர்சனம் செய்துள்ளார்.
தற்போது விஜய்யை விமர்சனம் செய்துள்ள சேத்தன் அஹிம்சாவின் உண்மையான பெயர் சேத்தன் குமார். இவர் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஏ தினகலு, பிருகாளி, சூர்யகாந்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமூக ஆர்வலராகவும் உள்ளார். பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் கொள்கைகளை தீவிரமாக எதிர்த்து வருபவர். அம்பேத்கர் கொள்கை சார்ந்து பேசி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்யைாக வை்ள்ளார்.
பிராமணர்களுக்கு எதிராக பேசியதாக கடந்த 2021ம் ஆண்டும், அதன்பிறகு 2022ம் ஆண்டில் ஹிஜாப் பிரச்சனை வெடித்தபோது கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கருத்து தெரிவித்தும் கைது செய்யப்பட்டார். கடந்த ஏப்ரல் மாதம் கூட கன்னட நடிகர் ராஜ்குமாரின் நினைவிடம் பற்றி சர்ச்சையை கிளப்பினர்.
மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் சிறந்த நடிகர். ஆனால் அவரது நினைவிடத்துக்காக பெங்களூர் நகரின் மைய பகுதியில் 2.5 ஏக்கர் நிலத்தை கடந்த 2006ல் மாநில அரசு ஒதுக்கியது பற்றி கேள்வி கேட்க வேண்டி உள்ளது. இந்த நிலத்தை பிற பயன்பாட்டிற்காக அரசு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனால் நடிகர் ராஜ்குமாரின் ரசிகர்கள் மற்றும் கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சேத்தன் அஹிம்சாவின் வீட்டுக்கு சென்று அவரை வெளியே இழுத்து வந்து மன்னிப்பு கோர வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
