வீரியமான காவிரி போராட்டம்! கர்நாடகா பந்த்தில் திரளாக பங்கேற்ற நடிகர், நடிகைகள்! யாரெல்லாம் தெரியுமா
பெங்களூர்: தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து இன்று கர்நாடகாவில் பந்த் நடத்தப்பட்டது. இதற்கு கன்னட திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் பதாகைகளுடன் களமிறங்கி ஆதரவு தெரிவித்தனர்.
கர்நாடகா-தமிழ்நாடு இடையேயான காவிரி நீர் பங்கீடு செய்வது தொடர்பான பிரச்சனை தற்போது விஸ்வரூபமாகி உள்ளது. கர்நாடகாவில் மழை இல்லை எனக்கூறி கர்நாடகா அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுத்து வருகிறது.

தமிழக அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்றத்தை அணுகி தமிழகத்துக்கான நீரை பெற்று வருகிறது. இந்நிலையில் தான் அக்டோபர் மாதம் 15ம் தேதி வரை தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு சார்பில் தமிழகத்துக்கு காவிரியில் 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை அக்டோபர் 15ம் தேதி வரை திறக்க பரிந்துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரையை அப்படியே ஏற்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டுக்கு மீண்டும் தண்ணீர் திறக்கும் நிலைக்கு கர்நாடகா தள்ளப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் தான் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க கூடாது என போராட்டங்கள் விஸ்வரூபமெடுத்துள்ளன. மண்டியா பந்த், பெங்களூர் பந்த் ஆகியவற்றை தொடர்ந்து கர்நாடகா பந்த் நடத்தப்பட்டது. காலை 6 மணிக்கு தொடங்கிய பந்த் மாலை 6 மணி வரை நடந்து வருகிறது. இன்றைய பந்த் போராட்டத்துக்கு வாட்டாள் நாகராஜ் தலைமை வகிக்கும் ஒருங்கிணைந்த கன்னட அமைப்பினர் நடத்தி வருகின்றனர்.
பெங்களூர் டவுன் ஹாலில் இருந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வாட்டாள் நாகராஜை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் கைது செய்தனர். இந்நிலையில் தான் இன்றைய பந்த்தில் கன்னட சினிமா துறையினர் பங்கேற்றனர். பெங்களூரில் உள்ள குருராஜ் கன்வென்சன் மையத்தில் திரண்டு அவர்கள் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

நடிகர்கள் சிவராஜ் குமார், தர்ஷன், துருவ் சர்ஜா, துனியா விஜய், நடிகை பூஜா காந்தி உள்பட ஏராளமான நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். இந்த வேளையில் ‛காவிரி போராட்டம்.. காவிரிக்காக போராட்டம்' என எழுதப்பட்டு இருந்த பதாகைகளை அவர்கள் கையில் வைத்திருந்தனர். அப்போது பல நடிகர், நடிகைகளும் ‛‛கர்நாடகாவில் தண்ணீர் இல்லாதபோது தமிழகம் தண்ணீர் கேட்பது நியாயமில்லை. இதனால் காவிரி பிரச்சனைக்கு இருமாநில அரசும் பேசி தீர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இன்றைய கர்நாடகா பந்த் என்பது பெங்களூர் மற்றும் ஓல்டு மைசூர் மாவட்டங்களான பெங்களூர் புறநகர், ராமநகர், மண்டியா, மைசூர், சாம்ராஜ்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மத்திய கர்நாடகா, வடகர்நாடகா மாவட்டங்களில் பந்த் பிசுபிசுத்துப்போனது. அங்கு மக்கள் இயல்பு வாழ்க்கையை நடத்தினர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications