கன்னட அமைப்பினரிடம் சிக்கி விரட்டப்பட்ட சித்தார்த்.. சித்தா பிரஸ் மீட்டில் ரகளை.. காவிரிக்காகவாம்!
பெங்களூர்: கர்நாடகாவில் சித்தா படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நடிகர் சித்தார்த்தை உள்ளே புகுந்து கன்னட அமைப்பினர் மிரட்டி வெளியேற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அருண் குமார் இயக்கத்தில் சித்தார்த் நடித்த திரைப்படம் சித்தா. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் ஆகிய படங்களை இயக்கிய அருண் குமார் இயக்கி இருக்கும் இப்படத்தின் மூலம் பிரபல மலையாள நடிகை நிமிஷா சஜயன் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.

அஞ்சலி நாயரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். விஷால் சந்திரசேகர், திபு நினன் தாமஸ் இணைந்து இப்படத்துக்கு இசையமைத்து இருக்கிறார்கள். இன்று வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை பேசி உள்ள இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
இந்த படம் கன்னடத்தில் சிக்கும் என்ற பெயரில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் புரோமோசனுக்காக கர்நாடகாவுக்கு சென்ற படத்தின் நாயகன் சித்தார்த், பெங்களூரு எஸ்.ஆர்.வி திரையரங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் படம் தொடர்பாக பேசிக்கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் கழுத்தில் சிவப்பு - மஞ்சள் நிற துண்டு போட்டுக்கொண்டு அத்துமீறி செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றுக் கொண்டு இருந்த திரையரங்கிற்குள் கன்னட ரக்ஷா வேதிகா அமைப்பினர் நுழைந்தனர். அவர்கள் மேடையில் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த நடிகர் சித்தார்த்தை நோக்கி வெளியேறுமாறு மிரட்டினர்.

"தண்ணீர் தமிழ்நாட்டுக்கு போகிறது; நீங்கள் படம் பற்றி பேசுகிறீர்களா?" மேடையில் அமர்ந்திருந்த சித்தார்த்தை நோக்கி அவர்கள் ஆவேசமாக கத்தினர். முதலில் அவர்கள் மிரட்டலை கண்டுகொள்ளாமல் சித்தார்த் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த கன்னட அமைப்பினர் மேடைக்கு முன் நின்று கூச்சலிட்டனர். மேலும், "இது இப்போ தேவையா.. தமிழ் படத்தை பற்றி இப்போது பேசனுமா. நீங்கள் எல்லோரும் வீதிக்கு வாங்க. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்று போராடுங்க. அதை விட்டுட்டு படத்தை பற்றி பேசுவதா. ஆர்டர் போட நாங்க வரல. ஆனா, கோரிக்கையாக கேட்கிறோம்" என்று கோஷமிட்டனர். கோரிக்கை என்று சொன்னாலும் கூட அவர்களின் உடல்மொழி சித்தார்த்தை மிரட்டுவதை போல இருந்தது.
Actor #Siddharth was forced to leave a press conference he was attending of #Tamil movie "#Chiththa" on #September 28, due to angry #protestors over the #Cauverywater dispute. pic.twitter.com/qviXRWcgLM
— Madhuri Adnal (@madhuriadnal) September 28, 2023
இதனால் நடிகர் சித்தார்த் பேச்சை நிறுத்திவிட்டு அமர்ந்திருந்தார். கன்னட அமைப்பினர் அவரை வெளியேறுமாறு தொடர் மிரட்டல் விடுத்ததை அடுத்து அவர் செய்தியாளர்களை நோக்கி கையெடுத்து கும்பிட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறினார். இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் சித்தார்த் தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்து வருகிறார். தென் இந்திய சினிமாவில் பிரபலமான முகமாக அறியப்பட்டு வரும் இவர், சமூக வலைதளங்களில் மத்திய அரசு, பாஜகவை கடுமையாக விமர்சித்து அதற்காக பல்வேறு மிரட்டல்களை எதிர்கொண்டவராவார்.
Actor #Siddharth's press conference for his recently released Tamil movie "#Chiththa" was stopped by pro-Cauvery #activists in #Bengaluru pic.twitter.com/X1kt83sHeO
— Madhuri Adnal (@madhuriadnal) September 28, 2023
தமிழ்நாடு - கர்நாடகா இடையே நூற்றாண்டு பிரச்சனையாக இருந்து வரும் காவிரி விவகாரம் கடந்த சில மாதங்களாக மீண்டும் சூடுபிடித்து இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அறிவுறுத்தியபடி தமிழ்நாட்டுக்கு தேவையான நீரை கர்நாடக அரசு திறந்துவிடாததற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கில் தமிழ்நாட்டுக்கு காவிரி மேலாண்மை வாரியம் சொன்னபடி தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனை கண்டித்து கர்நாடகாவில் போராட்டங்கள் தீவிரம் அடைந்து உள்ளன. கடந்த செவ்வாய்கிழமை பெங்களூர் பந்த் என்ற பெயரில் கர்நாடக அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் நாளை மாநிலம் தழுவிய பந்தில் கர்நாடக அமைப்புகள் ஈடுபடுவதாக அறிவித்து உள்ளன.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications