தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கூடாது.. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு பிறகும் அடங்காத கன்னட அமைப்புகள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: எக்காரணம் கொண்டும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று கன்னட அமைப்புகள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள், "டிகே சிவக்குமார் அரசு உச்ச நீதிமன்றத்தில் சரியாக வாதங்களை முன் வைக்கவில்லை என்றும், விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு டிகே சிவக்குமார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கோஷம் எழுப்பினர்.

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் கர்நாடகாவில் போராட்டம் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. பாஜகவினரும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்று கூறி காலி குடங்களுடன் போராட்டத்தின் குதித்தனர். அப்போது தமிழக அரசுக்கும் முதல்வர் விஜய்க்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.

Kannada organizations remain defiant despite Supreme Court order not to release water to Tamil Nadu

கர்நாடகாவுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறக்க மறுத்து வந்த கர்நாடகாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடகாவுக்கு சரமாரி கேள்வி எழுப்பியதோடு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு ஏன் தண்ணீர் திறந்துவிடவில்லை? இயற்கை கொடுத்த மழை நீரை முழுமையாக தேக்க முடியவில்லை என்பதால் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதா? என்று காட்டமாக கேள்வி எழுப்பினர். மேலும், இந்த விவகாரம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று கூறி வரும் 24 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்ததோடு, அதுவரை காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபடி தமிழ்நாட்டுகு தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

தண்ணீர் திறக்க கூடாது என போராட்டம்

காவிரி விவகார்த்தில் தொடர்ந்து அடாவடியாக செயல்பட்ட கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாண்டியாவில் நேற்று பூமித்தாய் போராட்ட சமிதி அமைப்பு சர்பில் ஸ்ரீரங்கப்பட்டா தாலுகா அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது. எந்த காரணத்திற்காகவும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று கோரி போராட்டம் நடத்தினர்.

அதேபோல, மாண்டியாவில் உள்ள சஞ்சய் சர்க்கிள் பகுதியிலும் விவசாய அமைப்புகள் கன்னட அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு தகுந்த வாதம் முன்வைக்க தவறிவிட்டது. எந்த காரணத்திற்காகவும் தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கூடாது. விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு டிகே சிவக்குமார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

பாஜகவினரும் காலி குடங்களுடன் போராட்டம்

பாஜகவினரும் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசுக்கும் முதல்வர் விஜய்க்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். கர்நாடகா தண்ணிர் பிரச்சினையை சந்திக்கும் நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பாஜகவினர் கூறினர்.

போராட்டத்தின் போது பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது. மேலும் பெங்களூர் - மைசூர் சாலையில் மறியலிலும் பாஜகவினர் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக அரசுக்கு எதிராகவும் டிகே சிவக்குமாருக்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்படது. காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் கர்நாடகாவில் போராட்டம் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+