233 தேர்தலில் படுதோல்வி.. 234வதாக கர்நாடகாவில் களமிறங்கும் சேலம் பத்மராஜன்! யாருக்கு குறி தெரியுமா?
பெங்களூர்: இந்தியாவில் அதிக முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நபர் என்ற பெருமையை சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த பத்மராஜன் பெற்றுள்ளார். இதுவரை 233 தேர்தல்களில் தோல்வியடைந்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இவர் 234வதாக கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் யாரை எதிர்த்து போட்டியிடுகிறார்? என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10ல் நடக்கிறது. மொத்தம் 224 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அன்றைய தினம் தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் பாஜக சார்பில் 212 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் சார்பில் 166 தொகுதிகளுக்கும், ஜேடிஎஸ் கட்சிக்கு 93 தொகுதிகளுக்கும், ஆம்ஆத்மி சார்பில் 140 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. ஒரே தொகுதிகளுக்கு பலர் சீட் கேட்பதால் குழப்பம் நீடிக்கும் நிலையில் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீதமுள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தேர்தல் மன்னன்: இந்நிலையில் தான் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். கடந்த 1988 ம் ஆண்டு முதல் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு வரும் பத்மராஜன் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், ராஜ்யசபா தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் பெரிய பெரிய தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டு வருகிறார்.
வரலாறு என்ன: இதற்கு முன்பு பாஜகவின் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், காங்கிரஸின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தமிழ்நாட்டின் மறைந்த முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோரையும் எதிர்த்து போட்டியிட்டுள்ளார். சமீபத்தில் என்றால் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
ரூ.1 கோடி செலவு: இதுவரை 233 முறை தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும் கூட பத்மராஜன் இன்னும் மனம் தளரவில்லை. தேர்தலுக்காக மட்டும் சுமார் ரூ.1 கோடி வரை செலவு செய்துள்ளதாக அவர் கூறிவருகிறார். மேலும் இந்தியாவில் அதிக தேர்தல்களில் தோல்வியடைந்த நபர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக வலம் வரும் பத்மராஜன் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

சிக்கான் தொகுதி: இந்நிலையில் தான் தனது 234வது தேர்தலாக கர்நாடகா சட்டசபை தேர்தலில் பத்மராஜன் போட்டியிட முடிவு செய்துள்ளார். இந்த தேர்தலில் அவர் தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மையை எதிர்த்து களம் இறங்குகிறார். இந்த தேர்தலில் கர்நாடகா முதல்வராக உள்ள பாஜகவின் பசவராஜ் பொம்மை மீண்டும் ஹாவேரி மாவட்டம் சிக்கான் தொகுதியில் போட்டியிடுகிறார்.
வேட்புமனு: இந்த தொகுதியில் கடந்த 2008, 2013, 2018 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு பசவராஜ் பொம்மை வெற்றி பெற்றார். இந்த முறையும் 4வது வெற்றியை குறிவைத்து அங்கேயே இறங்கி உள்ளார். இதனால் சிக்கான் தொகுதியில் பத்மராஜன் களம் காண உள்ளதாக பெங்களூரில் நேற்று அறிவித்துள்ளார். இதற்கான வேட்புமனுவை அவர் விரைவில் தாக்கல் செய்ய உள்ளார்.

பேட்டி: இதுகுறித்து பத்மராஜன் கூறுகையில், ‛‛அனைத்து தரப்பு மக்களிடம் இருந்து பாசத்தை பெறுவதற்கு தேர்தலில் போட்டியிடுகிறேன். இதில் சுயவிளம்பரம் கிடைக்கிறது. பெரிய பெரிய தலைவர்களுக்கு எதிராக போட்டியிட்டாலும், அவர்களை வெல்ல முடியாத நபராக தான் இருக்கிறேன். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிட்டேன். அப்போது 1,890 ஓட்டுகள் பெற்றேன். தேர்தலில் அதிக முறை நின்று தோல்வியடைந்த நபர் என்ற காரணத்தினாலே இந்த ஓட்டுகள் எனக்கு கிடைத்தன. இந்த முறை சிக்கான் தொகுதியில் முதல்வர் பசவராஜ் பொம்மையை எதிர்த்து போட்டியிடுகிறேன்'' என்றார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications