டிகே சிவக்குமார் சென்ற ஹெலிகாப்டர்.. கழுகு மோதி துண்டு துண்டாக உடைந்த கண்ணாடி..கர்நாடகாவில் பரபரப்பு
பெங்களூர்: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் சென்றுகொண்டிருந்த ஹெலிகாப்டரில் கழுகு மோதியது. கழுகு மோதியதில் ஹெலிகாப்டர் கண்ணாடி துண்டு துண்டாக உடைந்தது. இதையடுத்து ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி நடைபெறுகிறது. 224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 113 இடங்களை வெல்ல வேண்டும்.
இந்த தேர்தலில் பாஜக 224 தொகுதிகளிலும் காங்கிரஸ் 223 தொகுதிகளில் ஜனதா தளம் (எஸ்) 211 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருப்பதால் தேசிய தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பது, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பது என்று அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தேர்தல் களம் களை கட்டியுள்ளது. இன்று கர்நாடகாவில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், டி கே சிவக்குமார் தேர்தல் பிரசாரத்துக்காக ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார். அப்போது நடுவானில் சென்றுகொண்டிருந்த போது அவரது ஹெலிகாப்டரில் கழுகு மோதியது.
இதில் ஹெலிகாப்டர் கண்ணாடி துண்டு துண்டாக உடைந்தது. இதையடுத்து ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏதும் இல்லை. இதையடுத்து டி.கே சிவக்குமார் கார் மூலம் பிரசார இடத்துக்கு புறப்பட்டு சென்றார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications