கர்நாடகாவில் யாருடைய ஆட்சி? காங்கிரஸை விட 20 சீட் பின்தங்கும் பாஜக.. ABP+C Voter சர்வே முழு ரிசல்ட்!
பெங்களூர் : ஏபிபி - சி வோட்டர் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பகுதி வாரியாக வெளியாகியுள்ளன. மொத்தமுள்ள 224 தொகுதிகளின் கருத்துக்கணிப்பு ரிசல்ட்டை ஏபிபி வெளியிட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி 100-112 இடங்களைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானவற்றில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஏபிபி நியூஸ் - சி வோட்டர் இணைந்து நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஆட்சியமைக்க 113 இடங்கள் தேவை. இந்த எண்ணிக்கையை எட்டாவிட்டாலும், தனிப்பெரும் கட்சியாக அதிக சீட்களை காங்கிரஸ் கட்சி பிடிப்பதால், காங்கிரஸ் - ஜேடிஎஸ் ஆட்சி அமையக்கூடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கிரேட்டர் பெங்களூர் பகுதி : பெங்களூரு பகுதியில் மொத்தமுள்ள 32 சீட்களில் பாஜக 15-19 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 11-15 இடங்களையும் கைப்பற்றும், ஜேடிஎஸ் 1- 4 இடங்களைக் கைப்பற்றும் என ஏபிபி நியூஸ் - சி வோட்டர் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பழைய மைசூர் : பழைய மைசூரு மண்டலத்தில் மொத்தமுள்ள 55 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 28-32 இடங்களையும் ஜேடிஎஸ் 19-23 இடங்களையும் கைப்பற்றும், பாஜக 0-4 இடங்களை மட்டுமே பெற வாய்ப்புள்ளதாக ஏபிபி நியூஸ் - சி வோட்டர் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
மத்திய கர்நாடகா : மத்திய கர்நாடகாவில் மொத்தமுள்ள 35 சீட்களில் 12-16 இடங்களை பாஜகவும், 28-22 இடங்களை காங்கிரஸ் கட்சியும், ஜேடிஎஸ் 0-2 இடங்களையும் பிடிக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர கர்நாடகா : கடலோர கர்நாடகாவில் மொத்தமுள்ள 21 சீட்களில் 15-19 சீட்களை பாஜக கைப்பற்றும் என்றும் 2 -6 சீட்களை காங்கிரஸ் வெல்லும் என்றும் இதர கட்சிகளுக்கு எந்த சீட்டும் கிடைக்காது என்றும் ஏபிபி - சி வோட்டர் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர கர்நாடகாவில் பாஜக 49 சதவீத வாக்குகளையும் காங்கிரஸ் 37% வாக்குகளையும், ஜேடிஎஸ் 8% வாக்குகளையும் கைப்பெற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை கர்நாடகா : மும்பை கர்நாடகா பகுதியில் மொத்தமுள்ள 50 சீட்களில் பாஜக 24-28 இடங்களையும், காங்கிரஸ் 22-26 இடங்களையும் ஜேடிஎஸ் 0-1 இடத்தையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் கர்நாடகா : ஹைதராபாத் கர்நாடகா பகுதியில் மொத்தமுள்ள 31 இடங்களில் பாஜக 11-15 சீட்களையும், பாஜக 13-17 இடங்களையும், ஜேடிஎஸ் 0-2 இடங்களையும் கைப்பற்றும் என ஏபிபி - சி வோட்டர் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் : கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கும் ஏபிபி நியூஸ் + சி வோட்டர் கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், முழு விவரம்:
காங்கிரஸ் : 100-112
பாஜக : 83-95
ஜேடிஎஸ் : 21-29
மற்றவை : 2-6
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications