ஓகே.. கோலார் வேண்டாம்.. வருணாவிலேயே போட்டி போடுறேன்.. ராகுல் எச்சரிக்கையால் மனம்மாறிய சித்தராமையா
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர் சித்தராமையா தொகுதி மாறி கோலாரில் போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால் தற்போது சித்தராமையா தனது சொந்த தொகுதியான மைசூர் மாவட்டம் வருணாவில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
வருணா தொகுதியில் அவரது மகன் யதீந்திரா எம்எல்ஏவாக உள்ள நிலையில் தந்தைக்காக அவர் தியாகம் செய்ய உள்ளார். இந்நிலையில் தான் சித்தராமையாவின் மனமாற்றத்துக்கு பின்னணியில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே கொடுத்த எச்சரிக்கை இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ள மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்று கர்நாடகா. இங்கு மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2018 ல் சட்டசபை தேர்தல் நடந்தது. 5 ஆண்டு முடிவடையும் நிலையில் இன்னும் 2 மாதத்துக்குள் தேர்தல் நடைபெற உள்ளது.
அநேகமாக கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெறலாம் என கூறப்படுகிறது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் மாநிலம் முழுவதும் யாத்திரைகள் நடத்தி வருகின்றன. மேலும் ஆம்ஆத்மி, ஜேடிஎஸ் சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தல் களம் கர்நாடகாவில் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தான் கர்நாடகா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் முகமாக பார்க்கப்படும் சித்தராமையா தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தால் சித்தராமையா முதல்வராக வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதியில் கடந்த முறை வென்ற நிலையில் நடைபெற உள்ள தேர்தலில் கோலார் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். இங்கு சித்தராமையா சார்ந்த குருபா சமுதாயத்தினர் மற்றும் முஸ்லிம் மக்கள் வெற்றியை நிர்ணயிக்கும் அளவில் உள்ளதால் அவர் கோலார் தொகுதியில் கண்வைத்தார்.
இருப்பினும் கூட கட்சி தலைவர்கள் இடையேயான பிரச்சனை என்பது அவருக்கு மைனஸாக பார்க்கப்பட்டது. இதனை தான் உள்கட்சி சர்வேயும் எதிரொலித்தது. அதாவது கோலார் தொகுதியில் சித்தராமையா போட்டியிட்டால் வெற்றி என்பது சாதாரணமாக இருக்காது. கட்சி தலைவர்கள் இடையே நிலவும் கருத்து வேறுபாடு தான் இதற்கு காரணம் என உள்கட்சி சர்வே தெரிவித்தது. இதை குறிப்பிட்டு டெல்லியில் நடந்த ஆலோசனையில் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே சித்தராமையாவுக்கு அறிவுறுத்தினர். அதன்படி வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள சொந்த தொகுதியான வருணாவில் போட்டியிடும்படி கூறினர்.
வருணா என்பது மைசூர் மாவட்டத்தில் உள்ளது. இது சித்தராமையாவின் செந்த தொகுதியாகும். 2013 தேர்தலில் இங்கு வெற்றி பெற்ற சித்தராமையா முதல்வரானார். ஆனால் கடந்த 2018 தேர்தலில் வருணா தொகுதியை அவர் தனது மகன் யதீந்திராவுக்கு விட்டு கொடுத்தார். இதில் யதீந்திரா வெற்றி பெற்றார். மாறாக சித்தராமையா மைசூர் மாவட்டம் சாமுண்டீஸ்வரி மற்றும் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியில் போட்டியிட்டார். இதில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோற்ற சித்தராமையாக பாதாமியில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் ராகுல் காந்தியின் எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரைப்படி சித்தராமையா மீண்டும் வருணா தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
இதனை இன்று சித்தராமையா உறுதி செய்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛நான் வருணா தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். இந்த தேர்தலில் மட்டும் 25 தொகுதிகளை சேர்ந்த ஆதரவாளர்கள் தங்களது தொகுதியில் போட்டியிட வரும்படி அழைத்தனர். எனது குடும்பத்தினர் வருணாவில் போட்டியிட கூறினர். இதனால் வருணாவில் இருந்து போட்டியிட அனுமதிக்கும்படி கட்சி மேலிடத்திடம் கூற உள்ளேன்''என்றார். இதன்மூலம் சித்தராமையா வருணாவில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
மகன் யதீந்திரா நிலை என்ன?
மேலும் வருணா தொகுதியில் சித்தராமையின் மகன் யதீந்திரா தற்போது எம்எல்ஏவாக உள்ளார். கடந்த தேர்தலில் மகனுக்காக தந்தை சித்தராமையா வருணா தொகுதியை விட்டு கொடுத்த நிலையில் இந்த தேர்தலில் தந்தை சித்தராமையாவுக்காக மகன் யதீந்திரா அந்த தொகுதியை விட்டு கொடுக்க உள்ளார். மேலும் யதீந்திரா வேறு தொகுதியில் போட்டியிடுவாரா? இல்லையா? என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகவில்லை. இது காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும்போது உறுதியாகிவிடும்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications