‛படுமோசம்’.. பெங்களூரில் சரிந்த ஓட்டுப்பதிவு.. 28 தொகுதிகளில் பதிவான வாக்கு சதவீதம் என்ன தெரியுமா?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. மொத்தம் 72.67 சதவீத வாக்குகள் பதிவானது. குறிப்பாக பெங்களூரில் கடந்த 2 தேர்தல்களை ஒப்பிடும்போதும் மிகவும் குறைந்த அளவில் மட்டுமே ஓட்டு பதிவாகி உள்ளது. இந்நிலையில் தான் பெங்களூரில் உள்ள 28 சட்டசபை தொகுதிகளில் தொகுதி வாரியாக பதிவான ஓட்டுகளின் விபரம் வருமாறு:
கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் மே 13ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் தான் நேற்று நடந்த தேர்தலில் கர்நாடகாவில் மொத்தம் 72.67 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருக்கிறது. இது கடந்த தேர்லை ஒப்பிடும்போது அதிகமாகும். அதாவது கடந்த 2018 ல் 72.44 சதவீத ஓட்டு பதிவான நிலையில் இந்த முறை சற்று அதிகரித்துள்ளது. மாறாக 2013ம் ஆண்டில் 71.83 சதவீதம் பதிவானதை ஒப்பிடும்போது இந்த ஆண்டு குறைந்துள்ளது.
மாறாக பெங்களூரில் மிகவும் குறைந்த அளவில் ஓட்டு பதிவாகி உள்ளது. நேற்றைய தேர்தலில் பெங்களூரில் உள்ள 28 தொகுதிகளிலும் மொத்தம் 52 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவாகி உள்ளது. கடந்த 2013ல் 62 சதவீத ஓட்டுகளும், 2018 ல் 57 சதவீத ஓட்டுகளும் பதிவான நிலையில் இந்த முறை வாக்காளர்கள் அதிகமானவர்கள் வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் கூட நேற்றைய தேர்தலில் கூடுதலான மக்கள் வாக்களிக்கவில்லை. தொகுதி வாரியாக பார்த்தால் யஷ்வந்த்புராவில் அதிகமாக ஓட்டுப்பதிவாகி உள்ளது. மாறாக ஆனேக்கல், சிவி ராமன் நகர் தொகுதியில் குறைந்த ஓட்டு பதிவாகி உள்ளது. மேலும் பெங்களூரில் உள்ள 28 சட்டசபை தொகுதிகளில் குறைந்த அளவில் மட்டுமே வாக்குகள் பதிவானது.
அதன்படி பெங்களூர் எலகங்காவில் 62.68 சதவீத வாக்குகள், கேஆர்புரா தொகுதியில் 52.68 சதவீத வாக்குகள், பேடராயனபுராவில் 56.6 சதவீத வாக்குகள், யஷ்வந்தபுராவில் 63.69 சதவீத வாக்குகள், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் 53.81 சதவீத வாக்குகள், தாசரஹள்ளியில் 50.16 சதவீத வாக்ககள், மகாலட்சுமி லேஅவட்டி்ல 54.25 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளனர்.
மல்லேஸ்வரம் தொகுதியில் 55.11 சதவீதம், ஹெப்பால் தொகுதியில் 54.73 சதவீதம், புலிகேசி நகர் தொகுதியில் 54.79 சதவீதம், சர்வக்ஞ நகர் தொகுதியில் 52 சதவீதம், சிவி ராமன் நகர் தொகுதியில் 47.43 சதவீதம், சிவாஜிநகர் தொகுதியில் 56.59 சதவீதம், சாந்தி நகரில் 54.33 சதவீதம், காந்தி நகரில் 57.28 சதவீதம், ராஜாஜிநகரில் 56.65 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
மேலும் கோவிந்தராஜ் நகரில் 53.5 சதவீதம், விஜயநகரில் 51.96 சதவீதம், சாம்ராஜ்பேட்டையில் 53.59 சதவீதம், சிக்பேட்டையில் 57.6 சதவீதம், பசவனகுடியில் 54.61 சதவீதம், பத்மநாபநகரில் 56.48 சதவீதம், பிடிஎம் லேஅவுட்டில் 49.15 சதவீதம், ஜெயநகரில் 58 சதவீதம், மகாதேவபுராவில் 55.04 சதவீதம், பொம்மனஹள்ளியில் 49.5 சதவீதம், பெங்களூர் தெற்கு தொகுதியில் 51.6 சதவீதம், ஆனேக்கல் 42.48 சதவீத ஓட்டுகள் பதிவானது.
-
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications