"மெஜாரிட்டி".. கர்நாடகாவில் ட்விஸ்ட்! அரியணை ஏறும் காங்கிரஸ்? பாஜகவிற்கு ஷாக் தரும் கருத்து கணிப்பு!
கர்நாடகாவில் மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.
பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் இந்த வருடம் நடக்க உள்ளது. பெரும்பாலும் மே மாதம் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கே ஹிஜாப் விவகாரம், பெங்களூரில் திட்டங்களுக்கு கமிஷன் பெற்ற விவகாரம், மத மோதல், ஜாதி ரீதியிலான மோதல் உள்ளிட்ட பல விஷயங்கள் தேர்தல் நேரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சி முடிவிற்கு வந்த, காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

கணிப்பு
இது தொடர்பாக லோக் போல் என்ற அமைப்பு வெளியிட்ட கருத்து கணிப்பில், மொத்தம் அம்மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 45 ஆயிரம் பேரிடம் கருத்து கணிப்பு செய்யப்பட்டு உள்ளது. அதில்
பாஜக - 77 - 83
காங்கிரஸ் 116 - 122
மதசார்பற்ற ஜனதா தளம் 21 - 27
மற்றவை 1 - 4
என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது காங்கிரஸ் இந்த தேர்தலில் வெற்றிபெற்று அங்கே ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

மெஜாரிட்டி
கர்நாடகாவில் மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும். இந்த நிலையில் பாஜகவிற்கு கண்டிப்பாக மெஜாரிட்டி கிடைக்காது. பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பதும் கடினம். பெரும்பாலும் காங்கிரஸ் தனி மெஜாரிட்டி பெறும். அல்லது மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க வேண்டிய நிலை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. பாஜக கடந்த தேர்தலில் வென்ற 104 இடங்களில் இருந்து 83 இடங்கள் அல்லது அதற்கு கீழாக குறையும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ்
காங்கிரஸ் கடந்த தேர்தலில் வென்ற 80 இடங்களில் இருந்து இந்த முறை 122 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. கடந்த முறை கர்நாடகாவில் கிட்டத்தட்ட தொங்கு சட்டசபை உருவான நிலையில் எடியூரப்பா 6 நாட்கள் ஆட்சி அமைத்தார். அதன்பின் ஜேடிஎஸ் - காங்கிரஸ் சார்பாக குமாரசாமி ஆட்சி அமைத்தார். ஒன்றரை வருட ஆட்சி ஆபரேஷன் கமலா காரணமாக கவிழ்ந்த காரணத்தால், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தது. எடியூரப்பா மீண்டும் ஆட்சி அமைத்த நிலையில், அதன்பின் பொம்மை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் கர்நாடகாவில் பாஜக தோல்வி அடையும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மண்டலம்
மண்டலா வாரிய வெளியிடப்பட்டு உள்ள கணிப்பில்
பழைய மைசூரில் பாஜக - 10 - 13 இடங்கள், காங்கிரஸ் 21- 24 இடங்கள், ஜேடிஎஸ் 14-17 இடங்களை வெல்லும்.
பெங்களூரில் பாஜக - 11- 14 இடங்கள், காங்கிரஸ் 19- 23 இடங்கள், ஜேடிஎஸ் 01 - 04 இடங்களை வெல்லும்.
கல்யாண் கர்நாடகாவில் பாஜக - 09 - 13 இடங்கள், காங்கிரஸ் 24 - 27 இடங்கள், ஜேடிஎஸ் 00 -02 இடங்களை வெல்லும்.

வேறு மண்டலம்
கிட்டூர் கர்நாடகாவில் பாஜக - 27 - 30 இடங்கள், காங்கிரஸ் 19- 22 இடங்கள், ஜேடிஎஸ் 00 -01 இடங்களை வெல்லும்.
கடலோர கர்நாடகாவில் பாஜக - 14 - 17 இடங்கள், காங்கிரஸ் 07- 10 இடங்கள், ஜேடிஎஸ் 00 -01 இடங்களை வெல்லும்.
மத்திய கர்நாடகாவில் பாஜக - 10 - 13 இடங்கள், காங்கிரஸ் 07 - 10 இடங்கள், ஜேடிஎஸ் 00 -01 இடங்களை வெல்லும், என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications