மாஸ்டர்மூவ்.. கர்நாடகாவில் பாஜக, ஜேடிஎஸ்க்கு செக்.. காங்., 2ம்கட்ட வேட்பாளர் பட்டியலை கவனிச்சீங்களா
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 124 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று 42 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் பாஜக, ஜேடிஎஸ் கட்சிகளின் ஓட்டு வங்கியாக உள்ள லிங்காயத் மற்றும் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை மே 13ல் நடக்கிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே 124 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலின்படி முன்னாள் முதல்வர் சித்தராமையா மைசூர் மாவட்டம் வருணா தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகேசிவக்குமார் ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இன்று 2வது கட்டமாக 42 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பாஜக எம்எல்சி பதவியை ராஜினாமா செய்து தாய் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு திரும்பிய பாபுராவ் சின்சனசூர் குர்மித்கல் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் பாஜகவின் ஓட்டு வங்கியாக இருக்கும் லிங்காயத் சமுதாயத்தினருக்கு அதிகமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 2வது கட்ட வேட்பாளர் பட்டியலில் 42 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில் அவர்களில் 11 பேர் லிங்காயத் சமுதாயத்தினர் ஆவார்கள். அதேபோல் ஜேடிஎஸ் கட்சியின் ஓட்டு வங்கியாக உள்ள ஒக்கலிகர் சமுதாயத்தினரும் 11 பேர் களமிறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பாஜக, ஜேடிஎஸ் கட்சிகளின் ஓட்டு வங்கியை காங்கிரஸ் கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
குருபா சமுதாயத்தை சேர்ந்த 3 பேருக்கும், பெஸ்டா-கோலி-முகவீரா, மாராத்தா, எஸ்சி(இடது), எஸ்சி(வலது), வால்மீகி சமுதாயத்தை சேர்ந்த 2 பேருக்கும், இதுதவிர நாயுடு, இடிகா, ராஜ்புத், ரெட்டி சமுதாயத்தை சேர்ந்த தலா ஒருவருக்கும் 2வது கட்ட வேட்பாளர் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இததவிர 3 முஸ்லிம்களுக்கும் தேர்தலில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
-
4 மணி நேரம்தான் தூக்கம்.. போனை போட்டு விளாசிய ஸ்டாலின்.. விக்கித்த தலைகள்.. என்ன நடந்தது? -
அப்செட்டில் ஸ்டாலின்.. ராகுல் பிரசாரத்திற்கு வராததால் காங்கிரஸின் 28 தொகுதிகளிலும் சிக்கல்.. பின்னணி -
விஜயால் வந்த ரெட் சிக்னல்.. ஸ்டாலின் மேஜைக்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்.. உடனே பறந்த மேஜர் உத்தரவு! -
விட்டமின் எம் வரலையே.. பதறும் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள்.. தமிழக தேர்தலில்.. பெரிய ட்விஸ்ட்! -
4 மணி நேர ‘உறக்கம்’.. பொறுப்பாளர்களை போனில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் ஸ்டாலின்! அறிவாலய அலர்ட்! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications