கர்நாடகா முதல்வராக யார் வேண்டும்? முதலிடத்தில் சித்தராமையா..கடைசியில் பொம்மை.. பரபர சர்வே முடிவு
கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது.
பெங்களூர்: அண்டை மாநிலமான கர்நாடகாவில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையாட்டி பல்வேறு சர்வேக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் கர்நாடகத்தின் அடுத்த முதல்வராக யார் வரவேண்டும்? என்பது தொடர்பாக ‛பிஎல்இ கர்நாடகா' சார்பில் ட்விட்டர் சர்வே மேற்கொள்ளப்பட்டது. இதில் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான காங்கிரஸின் சித்தராமையாவை அதிகமானவர்கள் விரும்பி உள்ள நிலையில் இந்த சர்வேயில் இப்போது முதல்வராக இருக்கும் பசவராஜ் பொம்மை கடைசி இடத்தை பிடித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்துக்கு கடந்த 2018 ல் சட்டசபை தேர்தல் நடந்தது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. ஆனால் இருகட்சிகளின் எம்எல்ஏக்கள் சுமார் 15க்கும் அதிகமானவர்கள் பாஜகவுக்கு தாவினர்.
இதனால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பாஜக அதிகாரத்தை கைப்பற்றியது. தற்போது பாஜகவின் பசவராஜ் பொம்மை முதல்வராக உள்ளார். இந்நிலையில் தான் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் கர்நாடகா மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

நான்கு முனை தேர்தல்
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தனித்து ஆட்சியை பிடிக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் ஆளும் பாஜக செயல்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி வாரம் ஒருமுறை கர்நாடகா சென்று பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்து வருகிறார். அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கர்நாடகாவுக்கு விசிட் செய்து வியூகங்கள் வகுத்து வருகிறார். இதுஒருபுறம் இருக்க இழந்த ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதேபோல் தங்களின் செல்வாக்கை நிரூபிக்கும் முனைப்பில் ஜனதாதளம் (எஸ்) மற்றும் ஆம்ஆத்மி கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. இதனால் நான்குமுனை போட்டி நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உற்சாகத்தில் காங்கிரஸ்
இந்நிலையில் தான் தேர்தல் தொடர்பாக மாநிலத்தில் பல்வேறு சர்வேக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சர்வேக்கள் அனைத்தும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளன. அதாவது சில சர்வேக்கள் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியை பிடிக்கும் என கூறிய நிலையில் பல சர்வேக்கள் காங்கிரஸ் கட்சி 100க்கும் அதிக இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என தெரிவித்துள்ளன. இதனால் காங்கிரஸ் தரப்பு உற்சாகமடைந்துள்ளது. மாறாக பாஜக தரப்பு களப்பணியை தீவிரப்படுத்தவும், மாநிலத்தில் மைனஸாக உள்ள விஷயங்களை பிளஸ் பாயிண்டாக மாற்றவும் திட்டமிட்டு வருகின்றன. இதில் நேரடியாக அமித்ஷா இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ட்விட்டரில் நடந்த சர்வே
இந்நிலையில் தான் தற்போது பிஎல்இ கர்நாடகா எனும் அமைப்பு சார்பில் ட்விட்டரில் சர்வே ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த சர்வேயில் மாநிலத்தின் அடுத்த முதல்வராக யார் வர வேண்டும்? என்ற கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. இதற்கு மக்கள் ஆர்வமாக ட்விட்டரில் ஓட்டளித்துள்ளனர். இந்த கேள்விக்கு கீழ் மொத்தம் 4 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. முதலாவதாக கர்நாடகா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் ரவி கிருஷ்ண ரெட்டி, 2வதாக ஜனதாதளம்(எஸ்) கட்சியின் எச்டி குமாரசாமி, 2வதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் சித்தராமையா, 4வதாக தற்போதைய முதல்வராக பாஜகவின் பசவராஜ் பொம்மை ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

சித்தராமையாவுக்கு ஆதரவு
இதில் மக்களின் தேர்வு என்பது சித்தராமையாவாக உள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சியின் சித்தராமையாவுக்கு 35.4 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜனதாதளம்(எஸ்) கட்சியின் குமாரசாமிக்கு 29.5 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்த நிலையில் ரவி கிருஷ்ண ரெட்டிக்கு 26.5 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் 4வது மற்றும் கடைசி இடத்தில் பசவராஜ் பொம்மை பிடித்துள்ளார். அவர் மீண்டும் முதல்வராக வர வேண்டும் என மொத்தம் 8.6 சதவீதம் பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர்.

முந்தைய சர்வேயில் நடந்தது என்ன?
முன்னதாக இதேபோல் South first poll survey மேற்கொள்ளப்பட்டது. அதிலும், கர்நாடகாவின் முதல்வராக முன்னாள் முதல்வர் சித்தாராமையா வர வேண்டும் என 28 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தற்போதைய பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மையை 19 சதவீதம் பேர் தேர்வு செய்துள்ளனர். அதன்பிறகு ஜனதாதளம் (எஸ்) கட்சியின் முன்னாள் முதல்வரான குமாரசாமியை 18 சதவீதம் பேர் தேர்வு செய்திருந்த நிலையில் சமீபத்தில் முதல்வர் பதவியை இழந்த பாஜகவின் எடியூரப்பாவுக்கு ஆதரவாக 11 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து இருந்தோடு காங்கிரஸ் கட்சியில் சித்தராமையாவுடன் முதல்வர் போட்டியில் உள்ள கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாருக்கு வெறும் 5 சதவீதம் பேர் மட்டும் முதல்வராக விருப்பம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications