குமாரசாமியிடம் “லகான்”.. கர்நாடகாவில் பாஜகவை முந்திய காங்கிரஸ்! 2018 க்கு உல்டா - கருத்துக்கணிப்பு
பெங்களூர்: கர்நாடகாவில் மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், பப்ளிக் டிவி நடத்தி இருக்கும் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சி பாஜகவை விட அதிக இடங்களில் வெற்றிபெறும் என்றும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியே இம்முறையும் ஆட்சியை தீர்மானத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் நடைபெற்று வரும் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியின் பதவிக்காலம் வரும் மே மாதம் 24 ஆம் தேதியோடு நிறைவடைய உள்ளது. எனவே கர்நாடகாவில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. மே 10 ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இந்த தேர்தலில் வெற்றிபெற அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் பாஜக பல்வேறு வியூகங்களை கையில் எடுத்து கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க போராடி வருகிறது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியோ மாநில கட்சியின் ஆட்சியை கர்நாடகாவில் அமைக்க உழைத்து வருகிறது.
பசவராஜ் பொம்மை கர்நாடகாவில் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு ஹிஜாப், ஹலால் பிரச்சனைகள், மதவாத கலவரங்கள், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள், பாஜக உட்கட்சி பூசல், லிங்காயத்து மக்களின் எதிர்ப்பு, கடைசியில் ஏற்பட்ட இடஒதுக்கீடு சர்ச்சை போன்றவை பாஜகவுக்கு பாதகமான நிலையை ஏற்படுத்தி உள்ளது.
எனவே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலும் கர்நாடக மாநில பாஜக அரசின் பணிகளை எடுத்துரைப்பதற்காகவும் கடந்த 2 மாதங்களாகவே கர்நாடக மாநில பாஜக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மூத்த நிர்வாகிகள் தொகுதி வாரியாக அக்கட்சி பொதுக்கூட்டங்களை நடத்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியோ கர்நாடகாவை சேர்ந்த தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை முடிந்த தெம்புடன் கர்நாடகாவில் தேர்தல் பணிகளை மேற்கொண்டார். ராகுல் காந்தியும் தற்போது அங்கு முகாமிட்டு தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். இரு கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக பாஜகவிற்கு உட்கட்சி பூசல் மேலும் அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் கர்நாடக மக்களின் மனநிலை குறித்து பப்ளிக் டிவி கருத்துக்கணிப்பை நடத்தி ட்விட்டரில் முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநிலத்தில் இம்முறை காங்கிரஸ் கட்சி 92 முதல் 102 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும், பாஜக 83 - 90 தொகுதிகளும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 29 - 34 இடங்களிலும், இதர 2 - 4 தொகுதிகளிலும் வெல்லும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை எந்த கட்சியும் பிடிக்காது என்பதால் இம்முறையும் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஆதரவை பெறும் கட்சியே கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் சூழல் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications