Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொடங்கிவிட்டது வாக்கு எண்ணிக்கை.. தபால் ஓட்டு எண்ணும் பணி ஆரம்பம்.. கர்நாடகா தேர்தல் ரிசல்ட் டென்ஷன்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது துவங்கி உள்ளது.. 224 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, மாநிலம் முழுவதுமுள்ள 36 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று காலை 8 மணியில் தொடங்கி நடந்து வருகிறது.

224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 2 தேசிய கட்சிகளும் மோதி உள்ளன.. கடந்த மே 10 ம் தேதி தேர்தல் இதற்கான நடைபெற்றது.

karnataka assembly election votes counting today in 34 centers and who will rule in karnataka

மும்முனைப்போட்டி: பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம், மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் பார்ட்டி, ஆம் ஆத்மி கட்சி, ஐக்கிய ஜனதா தளம் போன்ற போன்ற கட்சிகள் கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டன. இப்படி பல கட்சிகள் களம் கண்டாலும், பாஜக, காங்கிரஸ், மஜத கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவியது.. காரணம், அதிக இடங்களில் இந்த 3 கட்சிகள் மட்டும் தான் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தனர்.

ஆபரேஷன் தாமரை: அதாவது, பாஜக 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், மஜத 209 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன.. பாஜக, காங்கிரஸ், மஜத உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 2,615 வேட்பாளர்கள் 224 தொகுதிகளில் போட்டியிட்டனர். முதல்வர் பசவராஜ் பொம்மை - ஷிகோன், முன்னாள் முதல்வர் சித்தராமையா - வருணா, மஜத தலைவர் குமாரசாமி - சென்னபட்ணா, காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் - கனகபுரா தொகுதியில் போட்டியிட்டனர்.

பாஜக ஆபரேஷன் தாமரை என்ற பிளானையும், காங்கிரஸ் "ஆபரேஷன் ஹஸ்தா" என்ற பிளானையும் கையில் எடுத்ததுடன் இரு தரப்பிலும் பிரச்சாரங்களையும் வேகப்படுத்தினர். தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 58,545 வாக்குப்பதிவு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது.
வாக்குகள்: இந்த தேர்தலை பொறுத்தவரை, இதுவரை இல்லாத அளவில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.. 2018-இல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் பதிவான 72.44 சதவீதம் தான் இதுவரை அதிகமாக இருந்தது.. இப்போது அதைவிட கூடுதலாக 0.75 சதவீத வாக்குகள் கூடுதலாக பதிவாகியிருக்கின்றன.. அதாவது, 1952 ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவே அதிகபட்ச வாக்குப்பதிவாகும்.

224 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை, எண்ணும் பணி 36 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியிருக்கிறது.. முன்னதாக, வாக்குப்பதிவு செய்யப்பட்ட 75,603 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முத்திரையிடப்பட்டு 34 வாக்குப்பெட்டி மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன.

இன்று ரிசல்ட் என்பதால், வாக்குச்சாவடி மையங்களில் 24 மணி நேர ஆயுத பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.. அதேபோல, வாக்கு எண்ணிக்கையின்போது எந்தவித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

karnataka assembly election votes counting today in 34 centers and who will rule in karnataka

ரிசல்ட்: தேர்தலுக்கு முந்தைய கணிப்புகளில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்றே கருத்து கணிப்புகள் வெளியாகின.. அதேபோல, தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், காங்கிரஸ் தனிக்கட்சியாக அதிக இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவித்திருந்தன.. சில கருத்து கணிப்புகளில் பாஜக தனிக்கட்சியாக அதிக இடங்களை பெறும் என்றும், சில கருத்து கணிப்புகளில் தொங்கு சட்டப்பேரவை அமையும் வாய்ப்பு உள்ளதாகவும் மாறி மாறி எக்ஸிட் போல் ரிசல்ட்கள் வெளியாகின.

ஆனால், இந்த தேர்தலில் தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று, ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றன. அதேபோல் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூறி வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், இன்றைய தினம் எப்படி ரிசல்ட் வரப்போகிறது? என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக கிளம்பி உள்ளன. கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் www.eci.gov.in, www.eciresults.nic.in, eci.gov.in, results.eci.gov.in போன்ற இணையதளங்களில் பார்க்கலாம்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.. காலை 10 மணி முதல் முன்னிலை விவரம் வெளியாகி 12 மணிக்குள் பெரும்பாலான முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அநேகமாக இன்று மதியமே, இந்த தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும் என்றும் நம்பப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+