அவிழ்ந்த வேட்டி.. விடாமல் பேசிய சித்தராமையா.. மானம் காத்த சிவக்குமார்.. கர்நாடகா அவையில் சிரிப்பலை!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபையில் மைசூருவில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் குறித்து பேசிக் கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவின் வேட்டி அவிழ்ந்து அது கீழே இறங்கியது தெரியாமல் பேசிக் கொண்டிருந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு அவையில் கலகலப்பை ஏற்படுத்தும் வகையிலேயே அவர் பேசினார்.

Recommended Video

    தொப்பை பெருசா ஆகிடுச்சு, வேட்டி அவிழ்ந்துடுச்சு..... சட்டசபையில் சித்தராமையாவின் நகைச்சுவை!

    கர்நாடகா சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 13ஆம் தேதி பெங்களூரு விதான் சவுதாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரின் 8ஆவது கூட்டம் நேற்று காலை தொடங்கியது.

    அப்போது கேள்வி நேரம் தொடங்கியது. அதன் பின்னர் பூஜ்ஜிய நேரத்தையும் சபாநாயகர் அனுமதித்தார். அப்போது மைசூருவில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து விவாதம் நடத்த சபாநாயகரிடம் அனுமதி கேட்கப்பட்டது.

    எதிர்க்கட்சித் தலைவர்

    எதிர்க்கட்சித் தலைவர்

    இதையடுத்து அனுமதி கொடுத்த நிலையில் அந்த பலாத்கார சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா பேசிக் கொண்டிருந்தார். அப்போது சித்தராமையாவின் வேட்டி திடீரென அவிழ்ந்து கீழே இறங்கியது. இதை அவர் கவனிக்காமல் மிகவும் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டிருந்தார்.

    காங்கிரஸ் எம்எல்ஏ

    காங்கிரஸ் எம்எல்ஏ

    இந்த சம்பவத்தை அவரது அருகில் அமர்ந்திருந்த காங்கிரஸ் எம்எல்ஏ டிகே சிவக்குமார் பார்த்தார். வேட்டி அவிழ்ந்ததை சித்தராமையாவே பார்த்துவிட்டு சரி செய்வார் என சிறிது நேரம் காத்திருந்த போதிலும் அவர் அதை கவனிக்கவே இல்லை. இதையடுத்து டிகே சிவக்குமார், சித்தராமையாவின் அருகே சென்று யாருக்கும் கேட்காதவாறு விஷயத்தை சொன்னார்.

    வேட்டியை சரி

    வேட்டியை சரி

    உடனே இருக்கையில் அமர்ந்த சித்தராமையா வேட்டி கழன்றுவிட்டது என கூறி வேட்டியை சரி செய்ய முயன்றார். அப்போது சபையில் இருந்த உறுப்பினர்கள் சிரித்துவிட்டனர். எனினும் தொடர்ந்து பேசிய சித்தராமையா, அமைச்சர் ஈஸ்வரப்பாவை பார்த்து எனது வேட்டி அவிழ்ந்துவிட்டது ஏன் என தெரியவில்லை. எனக்கு பெரிய தொப்பை விழுந்துவிட்டது போல!

    கொரோனாவுக்கு பிறகு

    கொரோனாவுக்கு பிறகு

    எனக்கு கொரோனா வந்த பிறகும் எனது உடல் எடை 5 கிலோ கூடியுள்ளது. சில நேரங்களில் இது போன்று வேட்டி நழுவும் சம்பவங்கள் நடப்பது வாடிக்கைதான். இருங்க, வேட்டியை சரி செய்துவிட்டு பேசுகிறேன் என கூறினார். உடனே அமைச்சர் ஈஸ்வரப்பா வேட்டியை கட்டிவிட ஏதாவது உதவி வேண்டுமா என கேட்டார். அதற்கு சித்தராமையாவோ, அய்யய்யோ ஆளும் கட்சியிடம் இருந்து எனக்கு எந்த உதவியும் வேண்டாம், தேவைப்பட்டால் எனது கட்சிக்காரர்களை அழைத்து கொள்வேன் என்றார்.

    காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ்குமார்

    காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ்குமார்

    அப்போது முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் பேசுகையில் நமது கட்சியின் தலைவர் டிகே சிவக்குமார் கட்சியின் மானத்தை காக்க உங்கள் காதுக்கு அருகில் வந்து வேட்டி கழன்றதை ரகசியமாக சொன்னார். ஆனால் நீங்களோ (சித்தராமையா) வேட்டி அவிழ்ந்ததை உலகிற்கே சொல்லிவிட்டீர்கள். பாருங்கள் இதனால் சிவக்குமாரின் முயற்சி வீணாகிவிட்டது. உங்களுக்கெல்லாம் (பாஜக) எங்களின் வேட்டியை கழற்றுவதுதான் வேலை. ஈஸ்வரப்பாவை பாருங்கள் காத்துக் கொண்டிருக்கிறார் என்றார். இதனால் அவையில் தொடர்ந்து சிரிப்பலை எழுந்தது. பாஜக எம்எல்ஏ பங்காரப்பா , சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே இருந்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+