கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு
பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு, திங்கட்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது முழுமையான விவாதம் நடந்த பின்னரே வாக்கெடுப்பு நடத்த சபாநாயகரிடம் ஆளும் கூட்டணி கட்சியினர் கோரிக்கை விடுத்தனர் ஆளும் கூட்டணி அரசின் கோரிக்கைக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் விவாதம் நடைபெற்றது.

அப்போது, கர்நாடக சட்டசபையை ஒத்திவைக்கக் கோரி காங்கிரஸ், ம.ஜனதா தள உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து குரல் எழுப்பியதால் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து, திங்கட்கிழமை காலை 11 மணிக்கு சபாநாயகர் ரமேஷ்குமார் ஒத்திவைத்தார்.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் 16 எம்.எல்.ஏ.க் கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் மாநிலத்தில் அசாதாரண அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. சபாநாயகர் அறிவித்தபடி கர்நாடக சட்டசபை நேற்று(ஜூலை 18) பகல் 11:15 மணிக்கு கூடியது.
தன் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்தார். நேற்றே ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என பா.ஜ.,வினர் வலியுறுத்தினர். இதனை ஏற்க ஆளும் தரப்பு மறுத்துவிட்டது. இதனையடுத்து பா.ஜ., சார்பில், ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து மனு அளித்தனர்.
ஆளுநரும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால், அந்த கெடுவுக்குள் ஓட்டெடுப்பு நடக்கவில்லை.
இதனையடுத்து, இன்று மாலை 6 மணிக்குள் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநர் வஜூபாலா , மீண்டும் மற்றொரு கடிதத்தை அனுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. ஆனால், 6 மணி காலக்கெடு முடிந்தும் இன்றும் நம்பிக்கை தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்ட நிலையில், சட்டசபையை திங்கட்கிழமை காலை 11 மணிக்கு சபாநாயகர் ரமேஷ்குமார் ஒத்திவைத்தார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications