மஃப்டி டிரஸ்கூட இல்லை.. சூப்பர் கெட்டப்பில் போலீஸ்! 19 மாதம் தப்பிய கொள்ளையருக்கு பக்தர்கள் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஏடிஎம்மில் கொள்ளையடித்த 2 கிரிமினல்களும், கடந்த 19 மாதங்களாக போலீசாரையே சுற்றவிட்டுள்ளனர். கடைசியில் இப்படியொரு ட்விஸ்ட்டை கொள்ளையர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. செம ஸ்மார்ட்டாக திட்டமிட்டு, கையில் விலங்கை மாட்டியிருக்கிறார்கள் கர்நாடகா போலீஸ் டீம்.. இந்த செய்திதான் சோஷியல் மீடியாவில் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

கர்நாடக மாநிலம் பீடாரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த அந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒட்டுமொத்த தென்னிந்தியாவையுமே உலுக்கிப்போட்டுவிட்டது..

Karnataka ATM Robbery

கர்நாடகா வங்கி ஏடிஎம்

ஏடிஎம் வண்டியில் பணம் நிரப்ப வந்த ஊழியர்களை குறிவைத்து, முகமூடி அணிந்து வந்த 2 பேர் திடீரென மிளகாய்ப் பொடியைத் தூவி, சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் கிரி வெங்கடேஷ் என்ற பாதுகாப்பு ஊழியர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்..

சிவகுமார் என்ற இன்னொரு ஊழியர் படுகாயமடைந்து உயிருக்கு போராடும் நிலைமைக்கு ஆளானார்.. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் அங்கிருந்த ரூ.98 லட்சம் பணத்தை சுருட்டிக்கொண்டு மின்னல் போல தப்பியது.

ஏடிஎம் கொள்ளையர்கள் 2 பேர்

இப்படி கொள்ளையடித்த கையோடு அன்றைய தினமே ஹைதராபாத் தப்பிசென்ற இந்த கும்பல், அங்கிருந்து பஸ்ஸில் ஏறி தப்ப முயன்றது. ஆனால், 2 பேரின் நடவடிக்கையும் பார்த்து சந்தேகமடைந்தார் டிராவல்ஸ் மேனேஜர் ஜஹாங்கீர்.. உடனே அவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தலைமறைவானது.

ஆனால் அதற்கு பிறகு அந்த 2 கொள்ளையர்களும் எங்கே போனார்கள்? எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.. தெலங்கானா, பீகார், உத்தரப் பிரதேசம் என பல மாநிலங்களில் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்கள்தான் இந்த ஆபத்தான குற்றவாளிகள்.. இவர்களை பிடிக்க கர்நாடக போலீஸ், ரூ.5 லட்சம் சன்மானம் அறிவித்து தனிப்படையும் அமைத்தது.

Karnataka ATM Robbery

பீகார் விரைந்த தனிப்படை

இந்நிலையில், கொள்ளையர்கள் பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதையும், அவர்களது பெயர் அமன் குமார் மற்றும் அலோக் குமார் என்பதையும் தனிப்படை போலீஸார் கண்டுபிடித்தனர்.. உடனே பீகாருக்கு விரைந்தனர்...

இவ்வளவு கஷ்டப்பட்டு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து விட்ட நிலையில், போலீஸ் யூனிபார்மில் ஊருக்குள் சென்றால் மறுபடியும் தப்பி விடுவார்களே என்று தனிப்படை போலீஸார் உஷாரானார்கள்.. அதனால் யூனிபார்மும் இல்லாமல், சாதாரண டிரஸ்ஸும் இல்லாமல், வேறு டிரஸ்ஸில் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தனர். இதற்காக தனிப்படை போலீஸார் எல்லாருமே, யாத்திரை செல்லும் பக்தர்கள் போல வேடமணிந்து, கிராமம் கிராமமாக உலா வரத் தொடங்கினர்..

பக்தர்கள் போல வேடம்

யாருக்குமே சந்தேகம் வராத அளவுக்கு கொள்ளையர்கள் தங்கியிருந்த அந்த பகுதியிலேயே முகாமிட்டு, குற்றவாளிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் ஒவ்வொரு அசைவையும் ரகசியமாகக் கண்காணித்தனர். கிட்டத்தட்ட 20 நாட்கள் இப்படியே பக்தர்கள் வேடத்திலேயே வேட்டையில் ஈடுபட்டனர் கர்நாடக போலீஸார்.

இறுதியில், தாமோதர்பூர் கிராமத்திற்கு குற்றவாளிகள் 2 பேரும் பைக்கில் வரப்போவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அவ்வளவுதான், பீடார் எஸ்பி பிரதீப் குந்தி தலைமையில் ஒளிந்திருந்த போலீஸ் படை, அந்த 2 பேரையும் நாலாபக்கமும் சுற்றி வளைத்தது.

19 மாதங்கள் தலைமறைவு

இப்படியொரு ட்விஸ்ட்டை 2 கொள்ளையர்களும் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. இதனால் அங்கிருந்து தப்ப முயன்று போலீசாருடன் மோதலிலும் இறங்கியது.. இந்த திடீர் மோதலில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் கையில் காயம் ஏற்பட்டது. இருந்தாலும், 19 மாதங்களாக தலைமறைவாக இருந்த அந்த கில்லாடி கொள்ளையர்களை போலீஸார் தப்பவிடாமல், சுற்றி வளைத்து கையில் விலங்கை பூட்டினார்கள்.

ஒருவழியாக குற்றவாளிகள் பிடிபட்டு விட்டார்கள்.. ஆனால், இதுவரை அவர்கள் கொள்ளையடித்துச் சென்ற அந்த ரூ.98 லட்சம் பணம் எங்கே மறைக்கப்பட்டுள்ளது, அதை அவர்கள் எப்படியெல்லாம் செலவழித்தார்கள் என்பதை கண்டுபிடிக்கும் விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+