தோல்வி அடைந்த கர்நாடகா பந்த்.. பெங்களூரில் பேருந்துகள், பள்ளிகள், கடைகள் வழக்கம்போல இயக்கம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் இன்று கன்னட அமைப்புகள் சார்பில் பந்த் நடத்தப்படும் நிலையில், இந்த பந்திற்க்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. கர்நாடக தலைநகர் பெங்களூரில் பெரும்பாலான கடைகள் வழக்கம்போல் திறந்துள்ளன. பேருந்துகள் எப்போதும் போல ஓடத் தொடங்கியுள்ளன. வங்கிகள், பள்ளிகளும் வழக்கம்போல் இயங்குகின்றன.

காவிரி நதிநீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது. கர்நாடகத்தில் இந்த ஆண்டு போதிய அளவு பருவ மழை பெய்யவில்லை. இதனால் காவிரி படுகையில் உள்ள அணைகள் நிரம்பவில்லை. இதற்கிடையே, ஜூலை மாதம் தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

Mekedatu Karnataka bandh

இதற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன. குறிப்பாக கன்னட கூட்டமைப்புகளின் தலைவரான வாட்டாள் நாகராஜ், காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்டு 13 ஆம் தேதியான இன்று பந்த் நடத்த அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு பல்வேறு கன்னட அமைப்புகள், வாடகை கார், ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் ஆகியவை ஆதரவு தெரிவித்திருந்தன.

அதன்பிறகு, காவிரி படுகையில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், கிருஷ்ணராஜ சாகர் அணை தவிர்த்து மற்ற 3 அணைகளும் நிரம்பும் தருவாயில் உள்ளன. அணைகளுக்கு தண்ணீர்வரத்தும் அதிகரித்துள்ளதால், காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் இன்று திட்டமிட்டபடி பந்த் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்தச் சூழலில், ஆகஸ்ட் 11 ஆம் தேதி, தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு கர்நாடக அரசியல் கட்சி தலைவர்கள், கன்னட அமைப்புகளை சேர்ந்தவர்கள், விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து திட்டமிட்டபடி பந்த் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

"நாங்கள் எந்த விலை கொடுத்தாவது பந்த் நடத்துவோம். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர பந்த் அமலில் இருக்கும். எங்கள் வேலைநிறுத்த அழைப்பிற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று வாட்டாள் நாகராஜ் தெரிவித்திருந்தார் .

கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் இந்த பந்த்தை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கர்நாடகா ரக்ஷண வேதிகேயின் பல்வேறு பிரிவுகள், மாநில விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, தனியார் போக்குவரத்து மற்றும் ஹோட்டல் சங்கங்கள் ஆகியவை இன்று பந்த்தில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துள்ளன.

கன்னட கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள டாக்டர் ராஜ்குமார் ரசிகர் மன்ற தலைவர் சாரா கோவிந்த், கன்னட அமைப்புகளின் தலைவர்களான பிரவீன் ஷெட்டி, சிவராமே கவுடா உள்ளிட்டோர் முழு அடைப்புக்கு ஆதரவு இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதுபோல், வாடகை கார், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கமும் முழு அடைப்புக்கு ஆதரவு இல்லை என அறிவித்துள்ளது.

தனியார் பள்ளிக்கூடங்களும் ஆதரவு இல்லை என்றும், எப்போதும் போல் பெங்களூரில் தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவித்தன. அதுபோல், கடந்த மாதம் 31 ஆம் தேதி முழு அடைப்புக்கு ஆதரவு அளித்திருந்த பல்வேறு அமைப்புகள், சங்கங்கள் தங்களது ஆதரவை திரும்பப் பெற்றுள்ளன.

கர்நாடகத்தில் இன்று பந்திற்க்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக போக்குவரத்து மட்டுமின்றி, பெரும்பாலான கடைகள் வழக்கம்போல இயங்கி வருகின்றன. கர்நாடகா முழுவதும் உள்ள தனியார் அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும். மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் வங்கிகள் போன்ற அவசரகால சேவைகளும் செயல்படும்.

இன்று பள்ளிகளும் வழக்கம்போல செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், பள்ளி ஆசிரியர்களும், பணியாளர்களும் அடையாளச் சின்னமாக கருப்பு ரிப்பன்களையோ அல்லது கருப்புப் பட்டைகளையோ அணியலாம் என கர்நாடகப் பள்ளிகள் நிர்வாகக் கூட்டமைப்பு அறிவுறுத்தி உள்ளது. எனவே, கர்நாடகாவில் இன்று சில கன்னட அமைப்புகளின் பந்த்தால் பெரிதாக எந்த சிக்கலும் ஏற்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+