கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் பந்த்.. தமிழக எல்லை பகுதிகளில் பதற்றம்.. குவிக்கப்பட்ட போலீசார்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி கர்நாடகாவில் இன்று ஒருநாள் கன்னட அமைப்புகள் பந்த் நடத்துகின்றன. அசம்பாவிதங்களைத் தடுக்க முக்கிய இடங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஓசூரில் இருந்து கர்நாடகாவுக்கும், கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் குறைவான எண்ணிக்கையிலேயே பயணிகள் உள்ளனர்.

Mekedatu Karnataka bandh

காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடக அரசு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3500 கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பெங்களூர், மைசூர், மங்களூர் ஆகிய இடங்களில் கன்னட அமைப்பினரும், விவசாய சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரில் கன்னட அமைப்பினர் காலி குடங்களுடன் தமிழகத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர். மண்டியாவில் விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் பந்த் நடத்தப்போவதாக அறிவித்தார்., கர்நாடகாவில் மழை இல்லாததால் அணைகள் வறண்டு காணப்படுகின்றன. ஆனால் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவும், காவிரி மேலாண்மை ஆணையமும் தமிழகத்திற்கு ஆதரவாக உத்தரவிட்டுள்ளன. இதனை நாங்கள் ஏற்க மாட்டோம். ஒரு சொட்டு நீரைக் கூட தமிழகத்திற்கு திறக்க விட மாட்டோம்.

கர்நாடகாவுக்கு அநீதி ஏற்பட்டதை கண்டித்து ஆகஸ்ட் 13 ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கர்நாடகா முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். மாநிலம் முழுவதும் பேருந்துகள், வாடகை ஆட்டோ, டாக்ஸி, பள்ளி, கல்லூரிகள் என எதுவும் இயங்காது. தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மூடப்படும் என அறிவித்தார்.

இந்த பந்த்துக்கு பல கன்னட அமைப்புகள் ஆரம்பத்தில் ஆதரவு தெரிவித்திருந்தாலும், சமீபத்திய மழைப்பொழிவால் அணைகளில் நீர் இருப்பு அதிகரித்ததைக் காரணம் காட்டி பெரும்பாலான அமைப்புகள் ஆதரவை விலக்கியுள்ளன. கர்நாடகா ரக்ஷண வேதிகேயின் பல்வேறு பிரிவுகள், மாநில விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, தனியார் போக்குவரத்து மற்றும் ஹோட்டல் சங்கங்கள் ஆகியவை பந்த்தில் பங்கேற்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளன. கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் இந்த பந்த்தை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவை இயங்கும். கேஎஸ்ஆர்டிசி, பிஎம்டிசி பஸ்கள், மெட்ரோ ரயில்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள், பள்ளி வாகனங்கள் ஆகிய போக்குவரத்து சேவைகளும் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கர்நாடக - தமிழக எல்லையான அத்திப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டால் கர்நாடகா - தமிழ்நாடு இடையேயான பஸ் சேவைகளில் தற்காலிக தடை ஏற்பட வாய்ப்புள்ளது. அசம்பாவிதங்களைத் தடுக்க முக்கிய இடங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

6 மணி முதல் பந்த் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஓசூரில் இருந்து கர்நாடகாவுக்கும், கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் குறைவான எண்ணிக்கையிலேயே பயணிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+