30 சாக்குப்பையில் கட்டுக்கட்டாக பணம்.. லட்சாதிபதினு கூட தெரியாமல் இறந்த பிச்சைக்கார மூதாட்டி!
பெங்களூர்: கர்நாடகாவில் கடந்த 40 ஆண்டுகளாக யாசகம் பெற்று வாழ்ந்து வந்த 70 வயது மூதாட்டி தான் வசித்து வந்த வீட்டில் இறந்து கிடந்தார். உறவினர்கள் அங்கு சென்று அவரது உடலை கைப்பற்றினர். அப்போது வீட்டில் 30 சாக்குப்பையில் கட்டுக்கட்டாக மூதாட்டி பணம் வைத்திருந்ததை பார்த்து அனைவரும் வியந்து போயினர். மொத்தம் அதில் ரூ.8.40 லட்சம் பணம் இருந்தது.
கர்நாடகாவின் மண்டியாவில் குத்தலு பகுதியில் வசித்து வந்தவர் நூர் (வயது 70). இவர் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார். இவருடன் மொத்தம் 6 பேர் உடன்பிறந்தவர்கள். இவர்களில் நூர் மற்றும் இன்னொரு சகோதரி என 2 பேர் திருமணம் செய்யவில்லை.

இவரகள் 2 பேரும் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது சகோதரி காலமானார். இதனால் நூர் மட்டும் தனியாக வீட்டில் வசிக்க தொடங்கினார். அவர் தனது குடும்பத்தினர், உறவினர்கள் என யாரிடமும் பேசுவது கிடையாது. இதற்கிடையே தான் கடந்த சில நாட்களாக நூர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தனர். அங்கு நூர் இறந்து கிடந்தார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நல பிரச்சனையால் அவர் இறந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து நூர் வசித்து வந்த வீட்டை குடும்பத்தினர் சுத்தம் செய்தனர். குறிப்பாக நூர் யாரையும் அனுமதிக்காத அறை பூட்டியே கிடந்தது.
அதில் ஏதோ ரகசியம் இருப்பதாக குடும்பத்தினர் நினைத்தனர். சாவியை தேடிப்பார்த்தனர். ஆனால் சாவி கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தினர் அந்த அறையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சாக்குப்பைகள் ஏராளமாக இருந்தார். சுமார் 30க்கும் அதிகமான சாக்குப்பைகள் கட்டி வைக்கப்பட்டு இருந்தன.
அதனை அவிழ்த்து பார்த்தனர். அப்போது உள்ளே கட்டுக்கட்டாக பணம், நாணயங்கள் இருந்தன. இதை பார்த்து குடும்பத்தினர் ஷாக்காகினர். உடனடியாக அருகே உள்ள மசூதி நிர்வாகத்திடம் அந்த சாக்கு மூடைகளை ஒப்படைத்தனர்.
மசூதி நிர்வாகிகள் எண்ணிப்பார்த்தனர். அதில் மொத்தம் 8.40 லட்சம் இருப்பது தெரியவந்தது. யாசகம் பெற்ற பணத்தை மூதாட்டி நூர் தனது தேவைக்கு செலவு செய்துவிட்டு மீதி பணத்தை சேமித்து வைத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து மசூதி நிர்வாகத்திடம் ரூ.2.40 லட்சம் வழங்கப்பட்ட நிலையில் மீதமுள்ள ரூ.6 லட்சத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுபற்றி உறவினர் பைரஸ் அகமது கூறுகையில், ''நாங்கள் அவ்வப்போது வந்து அவரை (நூர்) பார்த்து செல்வோம். உணவு வழங்குவோம். அவரை குளிக்க வைப்போம்.
தற்போது பணம் இருந்த அறை மட்டும் எப்போதும் பூட்டியே இருக்கும். அதன் அருகே கூட யாரையும் விடமாட்டார். எங்களை எப்போதும் வாசலில் நிற்க வைத்தே பேசியே அனுப்பி விடுவார். ஆனால் அவரிடம் இவ்வளவு பணம் இருக்கும் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்தது இல்லை'' என்றார்.


Click it and Unblock the Notifications
