ரிஸ்க் எடுக்கலாம்.. துணிச்சலாக அமித் ஷா எடுத்த முடிவு.. கர்நாடகாவில் கலங்கிய "காவிகள்".. 14 தாமரையா?
பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. 23 வேட்பாளர்களின் பெயர்கள் இரவோடு இரவாக வெளியிடப்பட்டது.
நேற்று முதல்நாள் 189 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டது. 10 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. காங்கிரசில் இருந்து பாஜக வந்த பலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இன்னும் 35 எம்எல்ஏ வேட்பாளர்களை பாஜக அறிவிக்க வேண்டும் என்ற நிலையில் நேற்று இரவு 23 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. முதல் கட்ட பட்டியலில் 189 பேரில் அதில் 10 எம்எல்ஏக்கள் வாய்ப்புகளை இழந்துள்ளனர். இரண்டாவது கட்டமாக வெளியிடப்பட்ட 23 எம்எல்ஏக்கள் பட்டியலில் 4 எம்எல்ஏக்கள் வாய்ப்பை இழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 14 எம்எல்ஏக்கள் வாய்ப்பை இழந்து உள்ளனர்,

இரண்டாவது பட்டியலில் ஹுப்பள்ளி-தார்வாட் மத்திய தொகுதி சேர்க்கப்படவில்லை, அங்கு இருந்து தற்போதைய பாஜக எம்எல்ஏவும், முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் போட்டியிட விரும்பும் நிலையில், மீண்டும் அந்த தொகுதி அறிவிக்கப்படவில்லை. அங்கே ஷெட்டரை போட்டியிட வேண்டும் என்று பாஜக தலைமை கூறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் பாஜகவை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட ஷெட்டர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 23 பேர் கொண்ட இரண்டாவது பட்டியலில் இரண்டு பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
மொத்தமாக 14 எம்எல்ஏக்கள் போட்டியிடாதது ஒரு விதமான ரிஸ்க்தான். ஏனென்றால் பாஜக கிட்டத்தட்ட இதுவரை 65 புது முகங்களை வேட்பாளர்களாக அறிவித்து உள்ளது. அங்கே பாஜகவிற்கு எதிரான அலை நிலவிக்கொண்டு இருக்கும் நிலையில் நிறைய புது முகங்களை இறக்கி அமித் ஷா ரிஸ்க் எடுத்துள்ளார். எம்எல்ஏக்களாக இருக்கும் பலர் கழற்றிவிடப்பட்டு உள்ளதால், அங்கே காவிகள் இடையே கொஞ்சம் கலக்கமான சூழ்நிலையும் நிலவி வருகிறது.
கலகாதகியில் சிஎம் நிம்பண்ணவர், முடிகெரேயில் எம்பி குமாரசாமி, ஹாவேரியில் நேரு ஓலேகர், சன்னகிரியில் விருபாக்ஷப்பா ஆகியோருக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. இதில் விருபாக்ஷப்பா மீது ஊழல் புகார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கோட்டையான பழைய மைசூர் பகுதியில் பாஜக பெரும்பாலும் ஏற்கனவே இருக்கும் சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது, அதோடு அங்கே தோல்வி அடைந்த இடங்களில் மட்டும் புதிய முகங்களை மீண்டும் களமிறக்கி உள்ளது.
கடலோரப் பகுதிகளில்தான் பாஜக கொஞ்சம் ரிஸ்க் எடுத்துள்ளது, ஏனென்றால் அங்கே பாஜகவிற்கு ஏற்கனவே நல்ல ஆதரவு உள்ளது. மீதமுள்ள 12 இடங்கள் சிக்கலானவை என்பதால் இப்போதைக்கு பாஜக அங்கே வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
மூன்றாம் கட்ட லிஸ்ட் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தல் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அங்கு தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. கர்நாடகா- 224 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. கர்நாடக சட்டசபைத் தேர்தல் மே 10ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.
தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications