அடுத்த விக்கெட்! அவருக்கு சீட்டா? வேட்பாளர் லிஸ்டால் கொதித்தெழுந்த மாஜி துணை முதல்வர் லட்சுமண் சவதி
பெங்களூர் : கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான லட்சுமண் சவதி பாஜகவில் இருந்து விலகியுள்ளார். நேற்று வெளியிடப்பட்ட பாஜக வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாததால் அதிருப்தி அடைந்த லட்சுமண் சுவதி கட்சியில் இருந்து விலகியுள்ளார். அவர் காங்கிரஸ் கட்சிக்கு தாவக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 189 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தலைமை நேற்று இரவு வெளியிட்டது. பல சிட்டிங் எம்.எல்.ஏ.க்களின் பெயர் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. 52 புதிய வேட்பாளர்கள் பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

பாஜக வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாததால் அதிருப்தி அடைந்த முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவதி கட்சியில் இருந்து விலகியுள்ளார். லட்சுமண் சவதி முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் தீவிர விசுவாசி ஆவார். எடியூரப்பாவின் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராகவும் பதவி விகித்தவர்.
லட்சுமண் சவதிக்கு சீட் இல்லை : கர்நாடகாவின் அதணி தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு எம்.எல்.ஏவாக இருந்தவர் லட்சுமண் சவதி. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மகேஷ் குமதல்லியிடம் லட்சுமண் சுவதியை தோல்வியைத் தழுவினார். 2019ல் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியைக் கவிழ்த்து எடியூரப்பா முதல்வரானதற்கு இவரும் முக்கிய பங்காற்றினார். கர்நாடகாவில் எம்.எல்.சியாக நியமிக்கப்பட்டு, துணை முதல்வராகப் பதவி வகித்தார் சவதி.
ஆனால் நேற்று அறிவிக்கப்பட்ட பாஜக வேட்பாளர் பட்டியலில் அதணி தொகுதி வேட்பாளராக காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவிய மகேஷ் குமதல்லி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் கடும் அதிருப்தியடைந்த லட்சுமண் சவதி பாஜகவில் இருந்து விலகியுள்ளார். அவர் விரைவில் காங்கிரஸ் கட்சியில் சேரலாம் என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியில் : கர்நாடக முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவதி பாஜகவில் இருந்து விலகியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் சேரவிருப்பதாக பரவும் தகவல் குறித்து பேசிய கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், "அவர் என்னுடன் தொடர்பில் இல்லை. என்னுடன் இதுவரை பேசவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
லட்சுமண் சவதி 2012ல் கர்நாடக சட்டசபையில் ஆபாச படம் பார்த்து சிக்கிய 2 எம்.எல்.ஏக்களில் ஒருவர் ஆவார். சட்டசபையில் இருக்கும்போது போனில் ஆபாச படம் பார்த்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய போதிலும், அதன் பிறகு எடியூரப்பா தலைமையிலான ஆட்சியில் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார்.
பாஜகவில் உச்சகட்ட குழப்பம் : ஏற்கனவே, பாஜகவில் சீட் கிடைக்காத அதிருப்தியில் பாஜக மூத்த தலைவரான கே.எஸ்.ஈஸ்வரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதேபோல, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரும் தனக்கு சீட் கொடுக்க தலைமை மறுத்து வருவதால் தலைமையிடம் அழுத்தம் கொடுப்பதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாஜகவில் சீனியர் தலைவர்கள் பலருக்கும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால், கர்நாடகா பாஜகவில் பெரும் சலசலப்புகள் நிலவி வருகின்றன. முக்கிய தலைவர்கள் மத்தியில் இந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளதால், தேர்தலில் எதிர்மறை விளைவை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட்










Click it and Unblock the Notifications