சிறுமி பலாத்கார வழக்கு:80 வயது பாஜக எடியூரப்பா நாளை விசாரணைக்கு ஆஜராகிறார்! எல்லாமே சதி என புலம்பல்!
பெங்களூர்: 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 80 வயதாகும் கர்நாடகா முன்னாள் முதல்வரான பாஜகவின் எடியூரப்பா நாளை சிறப்புப் புலனாய்வுக் குழு முன்பாக விசாரணைக்கு ஆஜராக இருக்கிறார்.
கர்நாடகா முதல்வராக இருந்த எடியூரப்பா 75 வயதைக் கடந்ததால் பாஜக மேலிடத்தால் கட்டாயமாக பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதேநேரத்தில் கர்நாடகாவில் லிங்காயத்துகளின் வாக்குகள் தேவை என்பதற்காக கட்சிப் பதவிகளில் எடியூரப்பா நீடித்தும் வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் எடியூரப்பா மீது 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெங்களூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் எடியூரப்பா மனுத் தாக்கல் செய்திருந்தார். அதேநேரத்தில் இந்த வழக்கை கர்நாடகா அரசு, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மாற்றியது. இதனையடுத்து எடியூரப்பாவை விசாரணைக்கு ஆஜராக சிறப்புப் புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பியிருந்தது.
இதனிடையே எடியூரப்பா மீது புகார் கொடுத்த சிறுமியின் தாயார் திடீரென மரணம் அடைந்தார். ஆனால் நுரையீரல் புற்றுநோயால் சிறுமியின் தாயார் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து எடியூரப்பாவை போக்சோவில் கைது செய்ய கோரி சிறுமியின் சகோதரர் நீதிமன்றத்தை நாடினார். இதனால் எடியூரப்பாவை கைது செய்ய ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது போக்சோ நீதிமன்றம். இந்த உத்தரவைத் தொடர்ந்து எடியூரப்பா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் எடியூரப்பாவோ டெல்லிக்கு சென்று பதுங்கிவிட்டார். இதனால் கர்நாடகா சிறப்புப் புலனாய்வுக் குழுவும் டெல்லி சென்றது. மேலும் தம்மை கைது செய்ய தடை விதிக்க கோரி நீதிமன்றத்துக்குப் போனார் எடியூரப்பா. இதனை விசாரித்த நீதிமன்றம், ஜூன் 17-ந் தேதி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு எடியூரப்பா ஆஜராக வேண்டும்; அதுவரை எடியூரப்பாவை கைது செய்யக் கூடாது என தடை விதித்தது.
இந்நிலையில் டெல்லியில் இருந்து பெங்களூர் திரும்பிய எடியூரப்பா, தாம் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு நாளை (ஜூன் 17) ஆஜராக இருக்கிறேன். நான் யார் மீதும் எந்த குற்றமும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் யாரெல்லாம் எனக்கு எதிராக சதி செய்தனர் என தெரியும் என்றார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications