40 வயசு பெண்ணையும் விடாத கர்நாடக பாஜக எம்எல்ஏ.. சிறைக்கு வெளியே கால் வைத்ததும் அடுத்த கேஸில் கைது
பெங்களூர்: கர்நாடகா பாஜக முன்னாள் அமைச்சரும், சிட்டிங் எம்எல்ஏவுமான முனிரத்னா மீதான வழக்குகள், அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்து நிம்மதியாக வெளியில் வந்தவர், மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில், கடந்த பாஜக ஆட்சியில் தோட்டக்கலை, திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சராக இருந்தவர் முனிரத்னா. இவர் சினிமா தயாரிப்பாளராகவும் உள்ளார். மேலும், ராஜராஜேஷ்வரி நகர் தொகுதி பாஜக சிட்டிங் எம்எல்ஏவாகவும் உள்ளார். இந்நிலையில் முனிரத்னா கொலை மிரட்டல், பாலியல் வழக்கு என்று அடுத்தடுத்து சிக்கியிருப்பது அந்த மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

செலவராஜ் என்ற ஒப்பந்ததாரரிடம் முனிரத்னா ரூ .20 லட்சம் கேட்டு மிரட்டியதாக ஆடியோ வெளியானது. செலவராஜ் ரூ.1 லட்சம் தர முன்வந்தும் முனிரத்னா அதை ஏற்றுக் கொள்ளவில்லை. செலவராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்த முனிரத்னா, செலவராஜின் குடும்ப உறுப்பினர்களையும் தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். இந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கர்நாடகாவை உலுக்கிய ரேணுகாசாமி கொலை வழக்கில், முனிரத்னாவின் உறவினர் சம்மந்தப்பட்டுள்ளார். அவரின் வில்லங்க பின்னணி குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன. கொலை மிரட்டல் குறித்து செலவராஜ், முனிரத்னா மீது வியாலிக்கவார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் காவல்துறையினர் முனிரத்னா மீது இரண்டு தனி வழக்குகள் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக, காவல்துறை முனிரத்னாவை கைது செய்து கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே இந்த வழக்கில் ,இருந்து ஜாமீன் கேட்டு, முனிரத்னா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதற்குள் மற்றொரு வழக்கில் அவர் சிக்கினார். பெங்களூரைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முனிரத்னா மீது பாலியல் புகாரளித்துள்ளார்.
ராம்நகர் மாவட்டம், கக்காலிபுரா ரிசார்ட்டில் வைத்து முனிரத்னா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் புகாரளித்துள்ளார். மேலும் முனிரத்னா தன்னுடைய ஆதரவாளர்கள் மூலம் வீடியோ எடுத்து, பிளாக்மெயில் செய்து மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.மேலும் மற்றொரு ஆண் மூலம் தன்னை ஹனி ட்ராப் செய்ய முயற்சி செய்ததாகவும் அந்தப் பெண் முனிரத்னா மீது புகாரளித்திருந்தார்.
அதனடிப்படையில் முனிரத்னா, விஜய்குமார், சுதாகரா, கிரண் குமார், லோஹித் கவுடா, மஞ்சுநாத் மற்றும் லோகி ஆகிய ஏழு பேர் மீது பத்து பிரிவுகளின் கீழ் கக்காலிபுரா காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த பத்து நாட்களில் மட்டும் முனிரத்னா மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.
இதனிடையே, முனிரத்னாவின் ஜாமீன் மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் முனிரத்னாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனால் முனிரத்னாவும், பாஜகவினரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் அது சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. முனிரத்னாவின் ஜாமீன் நகலை எடுத்துக் கொண்டு அவரின் வழக்கறிஞர், பரப்பன அக்ரஹார சிலைக்கு அவசர அவசரமாக சென்று, அவரை அழைத்து வந்துள்ளார்.
அப்போது ஏற்கனவே சிறையின் வெளியே காத்திருந்த கக்காலிபுரா காவல்துறை, முனிரத்னாவை பாலியல் வழக்கில் கைது செய்தனர். இது பாஜகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் அரசு திட்டமிட்டு முனிரத்னாவை பழிவாங்கி வருவதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
முனிரத்னா அந்தப் பெண்ணை போல மேலும் சில பெண்கள், அதிகாரிகளை வீடியோ எடுத்தி ஹனி ட்ராப் செய்து மிரட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது. அதுகுறித்தும் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications