எதிரிகளுக்கு ஹெச்.ஐ.வி பரப்ப பகீர் நெட்வொர்க்.. கர்நாடகா பாஜக எம்எல்ஏவின்.. ஹனி ட்ராப் பின்னணி
பெங்களூர்: கர்நாடகா பாஜக எம்எல்ஏ முனிரத்னா கொலை மிரட்டல், பாலியல் வழக்கு என்று அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இதுவரை வந்த புகார்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு முனிரத்னா மீது அடுத்த புகார் வந்துள்ளது.
அவர் ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெண்கள் மூலம் எதிரிகளை ஹனி ட்ராப் செய்து, நோயை பரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அதிர்ச்சி புகார் வந்துள்ளது.

கர்நாடகா மாநிலம், ராஜராஜேஷ்வரி நகர் தொகுதி பாஜக சிட்டிங் எம்எல்ஏவாக இருப்பவர் முனிரத்னா. இவர் கடந்த பாஜக ஆட்சியில் தோட்டக்கலை, திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சராக இருந்தார். மேலும் அவர் சினிமா தயாரிப்பாளராகவும் உள்ளார். சமீபகாலமாக முனிரத்னா கொலை மிரட்டல், பாலியல் வழக்கு என்று அடுத்தடுத்து வழக்குகளில் சிக்கி வருகிறார்.
இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்வராஜ் என்ற ஒப்பந்தாரரிடம் முனிரத்னா பணம் கேட்டு மிரட்டிய ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. முனிரத்னா அவரிடம் ரூ.20 லட்சம் கமிஷன் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் முனிரத்னாவை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வந்தனர். அடுத்தடுத்து முனிரத்னாவின் வில்லங்க முகம் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே முனிரத்னா மீது பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார்.
பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து பிளாக் மெயில் செய்வதாகவும், ஹனி ட்ராப் செய்வதாகவும் முனிரத்னா மீது புகார் அளிக்கப்பட்டது. ஒப்பந்ததாரை மிரட்டிய வழக்கில் முனிரத்னாவுக்கு ஜாமீன் கிடைத்த நிலையில், பாலியல் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
முனிரத்னா குறித்து பெங்களூர் புறநகர் தொகுதி முன்னாள் எம்.பி டி.கே சுரேஷ் பல அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார். இதுகுறித்து டி.கே சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "முனிரத்னா மிகவும் மோசமானவர். ஒக்கலிகாஸ் மற்றும் தலித் சமுதாய மக்கள், பெண்களை மிகவும் கேவலமாக பேசுவார். தனக்கு பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் ஆதரவு இருப்பதால் தன்னை யாராலும் அசைக்க முடியாது என்று ஆணவத்துடன் பேசுவார்.
உண்மை தெரியாமல் பாஜக அவரை பாதுகாத்து வருகிறது. இது அரசியல் காழ்புணர்ச்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று சி.டி.ரவி, குமராசாமி உள்ளிட்ட தலைவர்கள் கடந்து விட முடியாது. இந்தப் பிரச்னையின் உண்மை தன்மை குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்க வேண்டும். மேலும் ஒக்கலிகாஸ், தலித் மக்கள் முனிரத்னாவுக்கு எதிராக போராட்டத்தல் ஈடுபட வேண்டும்.
முனிரத்னாவுக்கு இன்னொரு ஆபத்தான முகமும் உள்ளது. இவர் தன் எதிரிகளுக்கு ஹெச்.ஐ.வி. பரப்ப ஒரு நெட்வொர்க் வைத்துள்ளார். இதனால் மாநில அரசு இதை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நெட்வொர்க்கில் இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.
முனிரத்னா மீது பாலியல் புகார் அளித்துள்ள பெண் கூறுகையில், "முனிரத்னா ஹனி ட்ராப் செய்வார் என்று கூறியிருந்தேன். இதற்காக அவர் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சில பெண்களை வைத்துள்ளார். அவர்கள் மூலம் தன் எதிரிகளை ஹனி ட்ராப் செய்வார். இதன் மூலம் அவர்களை மிரட்டுவதுடன், அவர்களுக்கு ஹெச்.ஐ.வியும் பரப்பி வந்தனர்.
அப்படி ஒரு முறை தன் எதிரியை பழிவாங்க, ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மூலம் ஹனி ட்ராப் செய்ய திட்டமிட்டார். இதற்கு அந்தப் பெண்ணுக்கு என்னையும் உதவி செய்ய சொன்னார். நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். ஆனால், அந்த நெட்வொர்க்கில் இருந்த ஹெச்.ஐ.வி. பெண்கள் மற்றும் அவர்களால் பாதிக்கப்பட்டோரை கண்டறிவது காவல்துறைக்கு சவாலான காரியம்."என்றார்.
இந்தப் புகார் கர்நாடக அரசியலில் பூகம்பத்தையே ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்டவை பாஜகவை கடுமையாக சாடி வருகின்றனர். இந்தப் புகார் குறித்து காவல்துறையினர் கூறுகையில், "இதுபோன்ற வித்தியாசமான புகார்கள் வருவது இதுதான் முதல்முறை. இதை எப்படி அணுகுவது என்று நிபுணர்களிடம் கலந்தாலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." என்று கூறியுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications