'ராகுல் போதைக்கு அடிமையானவர்.. கட்சியைக் கூட நடத்தத் தெரியாதவர்..' சர்ச்சையைக் கிளப்பிய பாஜக தலைவர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் போதைப் பொருளை விற்பனை செய்பவர் என்றும் கர்நாடக பாஜக தலைவர் நளின் குமார் கடீல் விமர்சித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,.

கர்நாடகாவில் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே சமூக வலைத்தளத்தில் மிகப் பெரிய மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் மற்ற கட்சியின் தலைவரை விமர்சித்து ட்வீட் செய்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி குறித்து காங்கிரஸ் ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்யப்பட்ட நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அம்மாநில பாஜக தலைவர் நளின் குமார் கடீல் ராகுல் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்துள்ளார்.

 படிப்பறிவு இல்லாத மோடி

படிப்பறிவு இல்லாத மோடி

இந்த மோதலை தொடங்கி வைத்தது என்னமோ காங்கிரஸ் தான். கர்நாடக காங்கிரஸ் தனது ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடியைப் படிப்பறிவு இல்லாதவர் என்று பதிவிட்டது. அதில், "காங்கிரஸ் பள்ளிகளைக் கட்டியது ஆனால் மோடி ஒருபோதும் படிக்கச் செல்லவில்லை. வயதானவர்கள் கல்வி கற்றுக்கொள்ள புகிய திட்டங்களைக் கூட காங்கிரஸ் அறிமுகப்படுத்தியது, மோடி அங்கேயும் கற்கவில்லை. பிச்சை எடுப்பது தடைசெய்யப்பட்டிருந்தாலும், சோம்பேறித்தனமான மக்கள் தொடர்ந்து பிச்சை எடுத்து வருகின்றனர். இதற்குக் காரணம் மோடி தான்" என்று பதிவிட்டிருந்தது.

 பாஜக அட்டாக்

பாஜக அட்டாக்

இது மிகப் பெரிய சர்ச்சையாக வெடிக்க அந்த ட்வீட் உடனடியாக நீக்கப்பட்டது. இருந்தாலும், பாஜக தலைவர்கள் இதை விடுவதாக இல்லை. எதிர்க்கட்சியாக உள்ள ஒரு கட்சி, நாட்டின் பிரதமரை இப்படி இழிவுபடுத்தும் வகையில் பேசுவது முற்றிலும் தவறான போக்கு என பாஜக தலைவர்கள் சாடியுள்ளனர். பாஜக கர்நாடக செய்தித் தொடர்பாளர் மாளவிகா அவினாஷ், "காங்கிரஸ் கட்சியால் மட்டுமே இவ்வளவு கீழ்த்தரமாகப் பதிவிட முடியும். பதில் கொடுக்கக் கூட தகுதி இல்லாத கருத்து தான் இது" என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

 போதைப்பொருளுக்கு அடிமை

போதைப்பொருளுக்கு அடிமை

அத்துடன் நிற்காமல் கர்நாடக பாஜக தலைவர் நளின் குமார் கடீல் ராகுல் காந்தியை மிக மோசமாக விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் போதைப் பொருளை விற்பவர் என்றும் அவர் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "யார் இந்த ராகுல் காந்தி? அவர் போதைப் பொருளுக்கு அடிமையாக உள்ளவர், போதைப் பொருளை விற்பவர். இதை நான் ஒன்றும் கூறவில்லை. ஊடகங்களில் தான் இது போன்ற செய்திகள் வெளியாகின. ஒரு கட்சியைக் கூட உருப்படியாக நடத்த முடியாதவர் தானே அவர்" என்று மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

 காங்கிரஸ் சாடல்

காங்கிரஸ் சாடல்

கர்நாடக பாஜக தலைவரின் இந்த கருத்து இணையத்தில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் தனது ட்விட்டரில், "அரசியலில் கீழ்த்தரமான விமர்சனங்களை இருக்கக் கூடாது என்பதை நான் நேற்றே சொன்னேன், இதை பாஜகவும் ஒப்புக்கொள்ளும் என்றே நான் நினைக்கிறேன். ராகுல் காந்திக்கு எதிராக மிக மோசமான கருத்துகளைத் தெரிவித்த கர்நாடக பாஜக தலைவர் உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்" என்று சாடியுள்ளார். மற்ற கர்நாடக காங்கிரஸ் தலைவர்களும் இதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+