விஜய்க்கு காங்கிரஸ் அளிக்கும் ஆதரவை வாபஸ் வாங்குங்க.. டிகே சிவக்குமாரை அழுத்தும் கர்நாடக பாஜக

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் தீர்மானம் கொண்டு வந்த நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் சப்போர்ட் உடன் நடக்கும் விஜய் ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை அக்கட்சி திரும்ப பெற வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக எம்பியுமான பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பசவராஜ் பொம்மை கூறுகையில், "காங்கிரஸ் தயவால்தான் விஜய் ஆட்சி உள்ளது. டி.கே சிவக்குமார் தனது கட்சி மேலிடத்தில் இது பற்றி பேச வேண்டும். இல்லையென்றால், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மேகதாது தீர்மானத்தை திரும்பப் பெறச் செய்ய வேண்டும். கர்நாடகா மீது டிகே சிவக்குமாருக்கு உண்மையாகவே அக்கறை இருக்குமானால் இதை முதலில் அவர் செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Karnataka BJP Urges Congress to Withdraw Support to Vijay Government Over Mekedatu Resolution

மேகதாது அணை விவகாரம்

கர்நாடகம் - தமிழகம் இடையே பல ஆண்டுகளாக காவிரி நதி நீரை பங்கிட்டு கொள்வதில் பிரச்சினை நீடித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.15 ஆயிரம் கோடியில் புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளது. அதாவது பெங்களூர் தெற்கு (ராமநகர்) மாவட்டம் கனகபுரா அருகே மேகதாது என்ற இடத்தில் இந்த புதிய அணை கட்ட தீர்மானித்து உள்ளது.

400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யவும், பெங்களூர் மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் இந்த அணையை கட்டுவதாக கர்நாடக அரசு கூறியுள்ளது. இந்த அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு, மத்திய ஜல்சக்தி துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு கர்நாடக அரசு அனுப்பி வைத்துள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு உரிய நீர் கிடைக்காது என்பதால், தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

பசவராஜ் பொம்மை கோரிக்கை

சட்டமன்றத்தில் முதல்வர் விஜய், மேகதாது அணை கட்டக்கூடாது என வலியுறுத்தி தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேறியது. தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதால் கடுப்பான அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள், கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில், தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் அளித்துள்ள ஆதரவை வாபஸ் பெற வலியுறுத்த வேண்டும் என்று டி.கே சிவக்குமாருக்கு பசவாராஜ் பொம்மை கோரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்வரும், எம்பியுமான பசவராஜ் பொம்மை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எந்த மதிப்பும் இல்லை. மேகதாது அணை விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளது.

ஆதரவை வாபஸ் வாங்குங்க

இனி கர்நாடக மாநில அரசு இதை கையில் எடுக்க வேண்டும். கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாருக்கு உண்மையிலேயே மாநிலத்தின் மீது அக்கறை இருந்தால் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைமையிடம் பேசி, தமிழ்நாட்டில் விஜய் அரசுக்கு வழங்கப்படும் ஆதரவை திரும்பப் பெறச் சொல்ல வேண்டும்.. இல்லையெனில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மேகதாது தீர்மானத்தை திரும்பப் பெறச் செய்ய வேண்டும்" என்று தெரிவித்துளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைக்க 10 இடங்கள் குறைவாக இருந்ததால், 5 எம்.எல்.ஏக்களை வென்ற காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு முதல் ஆளாக ஆதரவு கொடுத்தது. தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடமும் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி அளித்த ஆதரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ள நிலையில், மேகதாது அணை விவகாரத்தை வைத்து விஜய் ஆட்சியை கலைக்க மேலிடத்திற்கு அழுத்தம் கொடுங்கள் என்று டிகே சிவக்குமாருக்கு பசவராஜ் பொம்மை பிரஷர் கொடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+