சென்னபட்டணாவில் தேவகவுடா குடும்பத்துக்கு நோஸ் கட் கொடுக்கும் பாஜக? அனல் பறக்கும் கர்நாடகா
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் சென்னபட்டணா சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் களமிறங்குவதற்கு பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவில் தம்மை வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தி கலகக் குரல் எழுப்பி வரும் யோகேஸ்வரை, டெல்லிக்கு வர மேலிடம் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மத்திய அமைச்சர் குமாரசாமி வென்ற சென்னபட்டணாவில் அவரது சகோதரியை களமிறக்கலாம் என்ற ஜேடிஎஸ்-க்கு நோஸ் கட் கொடுத்துவிட்டது பாஜக என்கிற ஆதங்கமும் வெளிப்படுகிறது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் சென்னபட்டணாவில் போட்டியிட்டு வென்றவர் முன்னாள் முதல்வர் குமாரசாமி. லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்பியானதால் சென்னபட்டணா எம்.எல்.ஏ. பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சராகி இருக்கிறார் குமாரசாமி.

இதனால் சென்னபட்டணா சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் தம்மையே பாஜக வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என தொடக்கம் முதலே குரல் கொடுத்து வருகிறவர் சிபி யோகேஸ்வர். சென்னபட்டணா தொகுதியில் 2013-ம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ.வானவர் யோகேஸ்வர். அத்தேர்தலில் குமாரசாமி மனைவி அனிதாவை 6,464 வாக்குகள் வித்தியாசத்தில் யோகேஸ்வர் தோற்கடித்தார். காங்கிரஸ் கட்சிக்கு 3-வது இடம்தான் கிடைத்தது.
ஆனால் 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளராக களம் கண்ட சிபி யோகேஸ்வரை குமாரசாமி வீழ்த்தினார். 21,530 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி வெற்றி பெற்றார். 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பாஜகவின் சிபி யோகேஸ்வரை 15,915 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் குமாரசாமி.
தற்போது குமாரசாமி மத்திய அமைச்சராகிவிட்டதால் சென்னபட்டணாவில் தம்மால் எளிதாக வெல்ல முடியும் என்பது யோகேஸ்வரின் நம்பிக்கை. அப்படி தமக்கு போட்டியிட வாய்ப்பு தராவிட்டால் 'அடுத்த' கட்ட முடிவு எடுப்பேன் எனவும் மிரட்டி வந்தார் யோகேஸ்வர்.
இதனிடையே சென்னபட்டணா தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகளும் குமாரசாமியின் சகோதரியுமான அனசுயாவை சென்னபட்டணாவில் நிறுத்துவது தொடர்பாக ஜேடிஎஸ் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்தது.
இந்த பின்னணியில் தற்போது யோகேஸ்வரை டெல்லிக்கு வருமாறு பாஜக மேலிடம் அழைத்துள்ளதாம். இதனையடுத்து ஓரிரு நாட்களில் டெல்லிக்கு செல்லும் யோகேஸ்வர், சென்னபட்டணா தொகுதி நிலவரம் குறித்து மேலிடத் தலைவர்களிடம் விவரிக்க இருக்கிறாராம். இதனால் பாஜகவே சென்னபட்டணாவில் போட்டியிடும் என்றும் ஜேடிஎஸ் கட்சிக்கு நோஸ் கட்தான் கிடைக்கும் என்றும் கர்நாடகா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications