Karnataka Budget 2026 LIVE: கர்நாடகாவில் குழந்தைகள் செல்போன் பயன்படுத்த தடை? சித்தராமையா தகவல்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று (வெள்ளிக்கிழமை) தனது 17வது மாநில பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்யவுள்ளார். கர்நாடகாவில் ஒருவர் இவ்வளவு முறை பட்ஜெட் தாக்கல் செய்வது இதுவே முதல்முறையாகும். இந்த பட்ஜெட்டில் இருக்கும் முக்கிய அம்சங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ம் தேதி முதலில் மத்திய அரசு தனது பட்ஜெட்டை தாக்கல் செய்யும். அதைத் தொடர்ந்து மாநில அரசுகளும் தங்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்யும். அதன்படி இன்றைய தினம் கர்நாடக அரசு தனது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. கர்நாடக முதல்வரும் நிதியமைச்சருமான சித்தராமையா தாக்கல் செய்யும் 17வது பட்ஜெட் இதுவாகும்.

ஹெசரகட்டா ஏரியில் கயாகிங் மற்றும் கேனோயிங் போன்ற நீர் சாகச விளையாட்டுகளுக்கு உயர்தர சிறப்பு பயிற்சி மையம் அமைக்கப்படும். மேலும், சைக்கிள் ஓட்டும் திறனை மேம்படுத்தவும், அதனை ஊக்குவிக்கும் வகையிலும், மைசூரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய சைக்கிள் வெலோட்ரோம் ஒன்று கட்டப்படும் - முதலமைச்சர் சித்தராமையா
உயர்கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைகளைக் களைய, ரோஹித் வெமுலா சட்டம் (பட்டியல் சாதிகள்/பழங்குடியினர் மீதான பாகுபாட்டில் இருந்து பாதுகாப்புச் சட்டம்) அமல்படுத்தப்படவுள்ளது. அனைத்து அரசு, தனியார் பல்கலைக்கழகக் கல்வி நிறுவனங்களிலும் இது அமல்படுத்தப்படும்- சித்தராமையா
முக்கிய துறைகளில் காலியாக உள்ள பதவிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கிறோம். தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். 56,432 காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம். நீதிமன்ற வழக்குகள் காரணமாக ஏற்படும் தாமதங்களைக் கருத்தில் கொண்டு, அதிகபட்ச வயது வரம்பில் ஐந்து ஆண்டுகள் தளர்வு அளித்துள்ளோம்- சித்தராமையா
பொருளாதாரம், நல்ல பொதுக் கல்வி, அனைவருக்கும் நல்ல சுகாதாரம், உள்ளடக்கிய பொருளாதாரம், நல்ல நிர்வாகம், Gig பொருளாதாரம், புவியியல் சமத்துவம், உலகளாவிய வர்த்தக பொருளாதாரம், உலகளாவிய புரதப் பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரம் மற்றும் வளர்ந்து வரும் நகர்ப்புற பொருளாதாரம் ஆகிய 11 விஷயங்களில் கவனம் செலுத்தப்படும்- சித்தராமையா












Click it and Unblock the Notifications