டிகே சிவகுமார் கைதை கண்டித்து காங். பந்த்.. 10 பேருந்துகளுக்கு தீவைப்பு.. கர்நாடகத்தில் மக்கள் அவதி
Recommended Video
பெங்களூர்: கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டிகே சிவகுமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வரும் நிலையில் 10-க்கும் மேற்பட்ட பேருந்துகளை தீவைத்து கொளுத்தினர்.
பண மோசடி வழக்கு தொடர்பாக நீண்ட நாள் விசாரணைர்ரு பிறகு கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டிகே சிவகுமாரை நேற்று இரவு அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து இன்று மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது.

இந்த நிலையில் மாநிலம் முழுக்க காங்கிரஸ் கட்சியினர் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூர்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையை காங்கிரஸ் கட்சியினர் வழிமறித்துள்ளனர். 4 கர்நாடக மாநில பேருந்துகள் மீது கல்வீச்சு நடத்தினர்.
இதனால் பெங்களூர்- மைசூரு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் பள்ளிகளும் கல்லூரிகளும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. சத்தானூரில் 10-க்கும் மேற்பட்ட பேருந்துகளை செவ்வாய்க்கிழமை இரவு தீவைத்து எரித்தனர்.
இதையடுத்து பாதுகாப்பு கருதி பேருந்துகளை இயக்க வேண்டாம் என கர்நாடக மாநில போக்குவரத்து கழகத்திடம் போலீஸார் கேட்டு கொண்டனர். முதல்வர் எடியூரப்பாவின் வீடு மற்றும் பாஜக அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் போக்குவரத்து இயக்கம் இல்லாததால் கடும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர்.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications