"முதல்வரிடம் வென்ற டிகே சிவக்குமார்".. ராமநகர் இனி பெங்களூர் தெற்கு என மாற்றம்! அமைச்சரவை ஒப்புதல்
பெங்களூர்: கர்நாடகாவில் பெங்களூர் அருகே உள்ள ராமநகர் மாவட்டத்தின் பெயரை பெங்களூர் தெற்கு மாவட்டம் என மாற்ற அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமாரின் சொந்த மாவட்டமான ராமநகரின் பெயர் மாற்ற பின்னணி என்ன? என்பது இங்கு பார்ப்போம்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். துணை முதல்வராக டிகே சிவக்குமார் இருக்கிறார். இவர் தான் காங்கிரஸ் கட்சியின் கர்நாடகா தலைவராக செயல்பட்டு வருகிறார்.

டிகே சிவக்குமாரின் சொந்த ஊர் கனகபுராவாகும். இந்த கனகபுரா ராமநகர் மாவட்டத்தில் உள்ளது. இந்த ராமநகர் மாவட்டம் பெங்களூரின் அருகிலேயே அமைந்துள்ளது. அதாவது பெங்களூர் - ராமநகர் இடையேயான தொலைவு என்பது வெறும் 55 கிலோமீட்டர் தான்.
இந்நிலையில் தான் டிகே சிவக்குமார் தனது சொந்த மாவட்டத்தை பெங்களூருவுடன் இணைக்க முயன்று வருகிறார்.இதற்காக கடந்த 9 ம் தேதி டிகே சிவக்குமார் தலைமையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முதல்வர் சித்தராமையாவை சந்தித்து மனு ஒன்றை வழங்கினர்.
அந்த மனுவில், ‛‛ராமநகர் மாவட்டத்தின் பெயரை பெங்களூர் தெற்கு மாவட்டம் என்று மாற்றம் செய்ய வேண்டும். ராமநகர், சென்னப்பட்டனா, மாகடி, கனகபுரா, ஹாரோஹள்ளி தாலுகாக்களை உள்ளடக்கி இந்த மாவட்டம் செயல்பட வேண்டும். இதன்மூலம் பெங்களூரை போல் ராமநகர் மாவட்டமும் வளர்ச்சி பெறும்'' என கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தான் டிகே சிவக்குமாரின் கோரிக்கைக்கு முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. அதாவது ராமநகர் மாவட்டத்தின் பெயர் பெங்களூர் தெற்கு மாவட்டம் என மாற்றம் செய்ய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ராமநகர் மாவட்டத்தின் பெயர் விரைவில் பெங்களூர் தெற்கு மாவட்டம் என மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதுபற்றி கர்நாடகா சட்டம் மற்றும் சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் எச்கே பட்டீல் கூறுகையில், ‛‛ராமநகர் மாவட்டத்தின் பெயரை பெங்களூர் தெற்கு என மாற்றுவதற்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது''என்றார். இதன்மூலம் விரைவில் ராமநகர் மாவட்டத்தின் பெயர் பெங்களூர் தெற்கு மாவட்டம் என மாற்றம் செய்யப்பட உள்ளது.
ராமநகர் மாவட்டத்தின் பெயரை பெங்களூர் தெற்கு என மாற்றம் செய்வதன் பின்னணியில் 2 முக்கிய காரணங்கள் உள்ளன. இதில் முதல் காரணம் என்னவென்றால் பெங்களூர் தெற்கு மாவட்டம் என பெயர் மாற்றம் செய்வதன் மூலம் ராமநகர் மாவட்டத்தை பெங்களூரின் ஒரு பகுதியாக நம்ப வைக்க முடியும். தற்போது பெங்களூரில் இடநெருக்கடி நிலவும் நிலையில் வரும் காலத்தில் ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் பெங்களூர் தெற்கு மாவட்டத்தில் தொடங்க வாய்ப்புள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் அதிக பலன் பெற முடியும்.
அதேபோல் 2வது காரணம் பெங்களூரை போல் அந்த மாவட்டத்தில் உள்ள நிலத்தின் மதிப்பும் அதிகரிக்கும். இதனால் அங்கு ரியல் எஸ்டேட் துறை வளர்வதோடு, அங்குள்ள மக்களின் நிலங்களின் மதிப்பு பன்மடங்கு அதிகரிக்கும். இதனால் சொந்த மாவட்ட மக்கள் அதிக பயன்பெறுவார்கள். அதுமட்டுமின்றி தற்போது பெயர் மாற்றம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள ராமநகர் மாவட்டத்தை முன்னாள் முதல்வரான ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி உருவாக்கினார்.
இந்த மாவட்டத்தில் குமாரசாமி மற்றும் டிகே சிவக்குமார் இடையே தான் அரசியல் போட்டி உள்ளது. இத்தகைய சூழலில் தான் குமாரசாமியின் பெயரை சொல்லும் வகையிலான ராமநகர் மாவட்டத்தின் பெயரை பெங்களூர் தெற்கு என்று மாற்றி தனது செல்வாக்கை டிகே சிவக்குமார் நிரூபிக்க திட்டமிட்டார். அதற்கு தற்போது நேரம் கூடி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications