Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டு வரை சிறை.. ஒப்புதல் அளித்த கர்நாடக அமைச்சரவை.. விரிவான தகவல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடகாவில் சர்ச்சைக்குரிய மதமாற்றத் தடை மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்த மசோதா வரும் சட்டசபை கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்டை மாநிலமான கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பசவராஜ் பொம்மை முதல்வராக உள்ளார்.

பல மாதங்களாகவே கட்டாய மதமாற்றத்தைத் தடை செய்யும் வகையில் புதிய சட்டம் கர்நாடகாவில் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டது.

 கட்டாய மதமாற்றத்தைத் தடை சட்டம்

கட்டாய மதமாற்றத்தைத் தடை சட்டம்

இந்தச் சூழலில் கட்டாய மதமாற்றத்தைத் தடை செய்யும் வகையிலான புதிய மசோதாவுக்குக் கர்நாடக அமைச்சரவை இன்று திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது, இந்த மசோதா வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'கர்நாடக மதச் சுதந்திரத்திற்கான உரிமைக்கான பாதுகாப்பு மசோதா, 2021' என்று அழைக்கப்படும் இந்த மசோதாவுக்கு எவ்வித மாற்றம் இன்றி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 இழப்பீடு

இழப்பீடு

மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், மதமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதேபோல ஒரே நிகழ்வில் அதிக அளவிலான மக்களை மதமாற்றம் செய்பவர்களுக்கு 3-10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த இந்தச் சட்டம் விரைவில் சட்டசபையில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள்

அதேநேரம் கர்நாடகா அரசின் இந்த மசோதாவுக்கு அம்மாநில எதிர்க்கட்சிகளின் கடுமையாக விமர்சித்துள்ளன. கிறிஸ்தவ சமூகத்தைக் குறிவைத்து இந்தச் சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன. ஏற்கனவே ஜேடிஎஸ் இந்த மசோதாவை ஆதரிக்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டது. எனவே, இந்த மசோதாவை நிறைவேற்றுவது என்பது பசவராஜ் பொம்மை அரசுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

 முதல் மாநிலம் இல்லை

முதல் மாநிலம் இல்லை

அதேநேரம் கட்டாய மதமாற்றச் சட்டத்தைக் கொண்டு வரும் முதல் மாநிலம் கர்நாடகா இல்லை. ஏற்கனவே, பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்ற சட்டங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைப் பல பாஜக அரசியல் தலைவர்களும் லவ் ஜிகாத் தடை சட்டம் என்றே குறிப்பிட்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+