Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகா கேபினட்: யாருக்கு அதிக இடம்? SC-ST 9, லிங்காயத் 8,வொக்கலிக மந்திரிகள் எத்தனை பேர் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர் : கர்நாடகாவில் இன்று புதிதாக 24 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். இதில் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த 6 பேருக்கும், வொக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்த 4 பேருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கர்நாடகா கேபினட்டில் சமூக ரீதியாக பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ள விவரம் இங்கே.

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசைத் தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி.

Karnataka cabinet: Congress caste wise balance among 34 in cabinet

இதையடுத்து கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டார். கடந்த வாரம் பெங்களூரில் உள்ள கண்டீரவா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சித்தராமையா முதலமைச்சராகவும், டி.கே.சிவகுமார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.

இவர்களுடன் 8 அமைச்சர்களும் பதவியேற்றனர். எம்.பி.பாட்டீல், பரமேஸ்வரா, பிரியங்க் கார்கே, முனியப்பா, ஜமீர் அகமதுகான், கே.ஜே.ஜார்ஜ், ராமலிங்க ரெட்டி, சதீஷ் ஜார்கிகோலி ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கான இலாகா இன்னும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இந்நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோர் டெல்லி சென்று காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். அதன்படி, புதிய அமைச்சரவை பட்டியல் தயார் செய்யப்பட்டது. புதிதாக 24 பேர் அமைச்சர்களாகும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இன்று 24 அமைச்சர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். புதிதாக பொறுப்பேற்கவுள்ள 24 அமைச்சர்கள் பட்டியலில், 6 பேர் லிங்காயத்துகள், 4 வொக்கலிகர்கள், இரண்டு பட்டியல் பழங்குடியினர் (ST), ஒரு பிராமணர் மற்றும் மற்ற சாதியினர் தலா ஒருவர் பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நின்ற லிங்காயத் சமூகத்திற்கு கேபினட்டில் 7 இடங்கள் கிடைத்துள்ளன.

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசின் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் 32 அமைச்சர்கள் என 34 பேர் கொண்ட கேபினட்டில் பல்வேறு சாதிகளுக்கு காங்கிரஸ் எவ்வாறு பிரதிநிதித்துவம் அளித்துள்ளது. கர்நாடகா கேபினட்டில் சமூக ரீதியான பிரதிநிதித்துவம் இங்கே:

சித்தராமையா (குருபா)
டிகே சிவக்குமார் (வொக்கலிகர்)
ஜி பரமேஸ்வரா (எஸ்சி),
கே எச் முனியப்பா (எஸ்சி),
கேஜே ஜார்ஜ் - சிறுபான்மையினர் (கிறிஸ்தவர்),
எம்பி பாட்டீல் (லிங்காயத்),
சதீஷ் ஜார்கிஹோலி (எஸ்டி),
பிரியங்க் கார்கே (எஸ்சி),
ராமலிங்க ரெட்டி (ரெட்டி),
ஜமீர் அகமது கான் - சிறுபான்மையினர் (முஸ்லிம்)

எம்.சி சுதாகர் - வொக்கலிகர்
தினேஷ் குண்டுராவ் - பிராமணர்
எச்.கே பாட்டீல் - ரெட்டி லிங்காயத்
கிருஷ்ணபைரே கவுடா - வொக்கலிகர்
செலுவராயசாமி கே வெங்கடேஷ் - வொக்கலிகர்
எச்சி மகாதேவப்பா - எஸ்.சி
ஈஷ்வர் கண்ட்ரே - லிங்காயத்
கியாத்தசந்திரா என் ராஜண்ணா - எஸ்.டி

எஸ்எஸ் மல்லிகார்ஜூன் - லிங்காயத்
சரணபசப்பா தர்சனாபூர் - லிங்காயத்
சிவானந்தா பாட்டீல் - லிங்காயத்
திம்மாப்பூர் ராமப்பா பாலப்பா - எஸ்.சி
தங்கடகி சிவராஜ் சங்கப்பா - எஸ்.சி
சரண்பிரகஷ் ருத்ரப்பா பாட்டீல் - லிங்காயத்
மன்கல வைத்யா - மொகவீர்
லட்சுமி ஹெப்பால்கர் - லிங்காயத்

ரஹிம் கான் - சிறுபான்மையினர் (முஸ்லீம்)
டி சுதாகர் - ஜெயின்
சந்தேஷ் லாட் - மராத்தா
போஸ்ராஜூ - சத்திரிய ராஜு
பைரதி சுரேஷ் - குருபா
எம்சி சுதாகர் - வொக்கலிகர்
நாகேந்திரா - எஸ்.டி
மது பங்காரப்பா - எடிகா

சமூக ரீதியாக பிரதிநிதித்துவம்:

தாழ்த்தப்பட்டோர் - 6
பழங்குடியினர் - 3
முஸ்லிம் - 2
கிறிஸ்தவர் - 1
லிங்காயத் - 8
வொக்கலிகா - 5
குருபா - 2
ஜெயின் - 1
பிராமின் - 1
மராத்தா - 1
சத்திரிய ராஜூ - 1
எடிகா - 1
மொகவீர் - 1
ரெட்டி - 1

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+