கர்நாடகா கேபினட்: 24 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றனர்! 6 எஸ்.சி 3 எஸ்.டி உறுப்பினர்களுக்கு இடம்!
பெங்களூர் : கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், தினேஷ் குண்டு ராவ், ஹெச்.கே.பாட்டீல் உள்ளிட்ட 24 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கர்நாடகாவில் 8 அமைச்சர்கள் ஏற்கனவே பதவியேற்ற நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, 24 பேர் இன்று அமைச்சர்களாக இன்று பதவியேற்றுக் கொண்டனர். பெங்களூரில் உள்ள ராஜ்பவன் கண்ணாடி மாளிகையில் இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது.

கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சர் யார் என்பதை தேர்வு செய்யும் பணி கடும் இழுபறியில் நீடித்த நிலையில், ஏற்கனவே முதலமைச்சராக இருந்த சித்தரமையாவை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்தது.
இதையடுத்து கடந்த மே 20ஆம் தேதி, சித்தராமைய்யா தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்றது. முதலமைச்சராக சித்தராமைய்யாவுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றார்.

கர்நாடகா கேபினெட் :
மேலும், பரமேஷ்வரா, முனியப்பா, கே.ஜி.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜார்கோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான் ஆகிய 8 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்நிலையில், கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, காங்கிரஸ் கட்சியின் 24 பேர், இன்று அமைச்சர்களாக பதவியேற்றனர். பெங்களூரில் உள்ள ராஜ்பவன் கண்ணாடி மாளிகையில், இன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு :
தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், எச்.கே பாட்டீல், கிருஷ்ணபைரே கவுடா, செலுவராயசாமி கே வெங்கடேஷ், எச்சி மகாதேவப்பா, ஈஷ்வர் கண்ட்ரே, கியாத்தசந்திரா என் ராஜண்ணா, எஸ்எஸ் மல்லிகார்ஜூன், உள்ளிட்டோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
மேலும் சரணபசப்பா தர்சனாபூர், சிவானந்தா பாட்டீல், திம்மாப்பூர் ராமப்பா பாலப்பா, தங்கடகி சிவராஜ் சங்கப்பா, சரணபிரகஷ் ருத்ரப்பா பாட்டீல், மான்கால் வைத்யா, லட்சுமி ஹெப்பால்கள், ரகீம் கான், டி சுதாகர், சந்தேஷ் லாட், போஸ்ராஜூ, பிஎஸ் சுரேஷ், மது எம்சி சுதாகர், நாகேந்திரா, மது பங்காரப்பா உள்ளிட்டோரும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications