கர்நாடகா புதிய அமைச்சர்களாக 24 பேர் தேர்வு! தினேஷ் குண்டுராவுக்கு வாய்ப்பு! நாளை பதவியேற்பு! லிஸ்ட்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்வி கங்காபூர்வாலா நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் அவரை பரிந்துரைத்த நிலையில் அதற்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று ஒப்புதல் வழங்கி உள்ளார். இந்நிலையில் தான் எஸ்வி கங்காபூர்வாலா யார்? என்ற பின்னணி தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 135 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக வெறும் 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை காங்கிரஸ் கட்சியிடம் பறிகொடுத்தது. மேலும் ஜேடிஎஸ் 19 இடங்களிலும், மற்றவர்கள் 4 தொகுதகிளிலும் வாகை சூடினர்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பதவியேற்றனர். இவர்களுடன் 8 பேர் புதிய அமைச்சர்களாக பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர். இவர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிபிரமாணம் செய்து வைத்தனர். இவர்களின் பதவியேற்பு விழா கடந்த 20ம் தேதி நடந்தது.
அன்றைய தினம் கர்நாடகா முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர், முன்னாள் மத்திய அமைச்சர் கேஎச் முனியப்பா, முன்னாள் அமைச்சர்களான எம்பி பட்டீல், கேஜே ஜார்ஜ், சதீஷ் ஜார்கிகோளி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான் உள்ளிட்டர்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் பிரியங்க் கார்கே, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் ஆவார்.
இதையடுத்து அமைச்சரவை விரிவாக்கம் செய்வது தொடர்பாக சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்தனர். இந்நிலையில் தான் புதிதாக அமைச்சராகும் 24 பேரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல் இன்று இரவு வெளியிடப்பட்டது.
அதன்படி எச்கே பாட்டீல், கிருஷ்ணபைரே கவுடா, செலுவராயசாமி கே வெங்கடேஷ், எச்சி மகாதேவப்பா, ஈஷ்வர் கண்ட்ரே, கியாத்தசந்திரா என் ராஜண்ணா, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டவர்களுக்கு அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் தினேஷ் குண்டுராவ் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக உள்ளார்.
மேலும் சரணபசப்பா தர்சனாபூர், சிவானந்தா பாட்டீல், திம்மாப்பூர் ராமப்பா பாலப்பா, எஸ்எஸ் மல்லிகார்ஜூன், தங்கடகி சிவராஜ் சங்கப்பா, சரணபிரகஷ் ருத்ரப்பா பாட்டீல், மான்கால் வைத்யா, லட்சுமி ஹெப்பால்கள், ரகீம் கான், டி சுதாகர், சந்தேஷ் லாட், போஸ்ராஜூ, பிஎஸ் சுரேஷ், மது எம்சி சுதாகர், நாகேந்திரா, மது பங்காரப்பா உள்ளிட்டோரும் அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் மதுபங்காரப்பா மறைந்த முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகன் ஆவார். மேலும் இவரது அக்காள் கீதாவை தான் நடிகர் சிவராஜ்குமார் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது புதிய அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 24 பேரும் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்க உள்ளார். பதவியேற்புக்கான நேரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதுபற்றி அறிவிப்பு நாளை காலை வெளியாகும் என கூறப்படுகிறது.
கர்நாடகா அமைச்சரவை பொறுத்தமட்டில் முதல்வர், துணை முதல்வர் உள்பட மொத்தம் 34 பேர் மட்டுமே இடம்பெற முடியும். ஏற்கனவே சித்தராமையா முதல்வராகவும், டிகே சிவக்குமார் துணை முதல்வராகவும் அவர்களுடன் 8 பேர் அமைச்சராகவும் பொறுப்பேற்றனர். தற்போது 24 பேர் புதிதாக அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். இதன்மூலம் கர்நாடகா அமைச்சரவை முழுமையடைகிறது. இனி புதிதாக ஒருவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என்றால் தற்போதைய அமைச்சரவையில் ஒருவரை நீக்கம் செய்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications