வேட்புமனு.. கர்நாடகா CM பசவராஜ் பொம்மையின் சொத்து எவ்வளவு தெரியுமா? ஸ்டாலினை விட 5 மடங்கு அதிகமாமே
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஹாவேரி மாவட்டம் சிக்கான் தொகுதியில் முதல்வர் பசவராஜ் பொம்மை போட்டியிடுகிறார். நேற்று அவர் வேட்புமனுத்தாக்கல் செய்த நிலையில் அவரது மொத்த சொத்து மதிப்புகள் வெளியாகி உள்ளன. அதன்படி பார்த்தால் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை விட பசவராஜ் பொம்மை 5 மடங்கு அதிக சொத்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் பசவராஜ் பொம்மை அப்பதவியை பெற்றார். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் முதல்வராக தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபையின் பதவிக்காலம் மே 24ல் முடிவடைய உள்ளது. இதனால் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 13ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
பாஜக வேட்பாளர் பட்டியல்: இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. 2 கட்டங்களாக பாஜகவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. முதலில் 189 தொகுதிகளுக்கும், 2வதாக 23 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 224 தொகுதிகள் இருக்கும் நிலையில் 212 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.
பசவராஜ் பொம்மை தொகுதி: இந்த தேர்தலில் பசவராஜ் பொம்மை தொகுதி மாறலாம் என்ற தகவல்கள் கசிந்தன. இறுதியாக அது நடக்கவில்லை. பசவராஜ் பொம்மை தற்போது எம்எல்ஏவாக உள்ள ஹாவேரி மாவட்டம் சிக்கான் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுகிறார். இவர் இந்த தொகுதியில் 2008 முதல் தற்போது வரை 3 முறை எம்எல்ஏவாக உள்ளார். 4 வது முறையாக தற்போது போட்டியிடுகிறார்.
சொத்து மதிப்பு: அதன்படி நேற்று பசவராஜ் பொம்மை வேட்புமனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவரது சொத்து விபரங்களை பசவராஜ் பொம்மை குறிப்பிட்டுள்ளார். அதன்படி அவரது மொத்த சொத்து மதிப்பு 49.70 கோடி என்பது தெரியவந்துள்ளது. இதில் 5.98 கோடி அசையும் சொத்துகளாகவும், ரூ.42.15 கோடி அசையா சொத்துகளாகவும் இருப்பது தெரியவந்தது.
மகனுக்கு கடன்: மேலும் அவரது மனைவி சன்னம்மா பெயரில் ரூ.1.14 கோடியும், மகள் அதிதி பெயரில் 1.12 கோடியும் முதலீடு இருப்பது தெரியவந்தது. மேலும் மகன் பரத்துக்கு ரூ.14.74 லட்சத்தை பசவராஜ் பொம்மை கடன் கொடுத்துள்ளார். மேலும் கடந்த மார்ச் 26ம் தேதி தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகாவில் தாரிஹாலா கிராமத்தில் பசவராஜ் பொம்மை 3 ஏக்கர் நிலத்தை வாங்கியிருப்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலினை விட அதிகம்: இந்நிலையில் தான் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் சொத்து மதிப்பை விட பசவராஜ் பொம்மையின் சொத்து மதிப்பு 5 மடங்கு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது ஏடிஆர் எனும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு சமீபத்தில் அனைத்து மாநில முதல்வர்களின் சொத்து விபரங்களை அவர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களின் அடிப்படையில் வெளியிட்டது.
ஸ்டாலின் சொத்து எவ்வளவு?: இதில் 28 மாநிலங்கள், டெல்லி மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 30 முதல்வர்களின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ரூ.510 கோடி சொத்துடன் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முதலிடம் பிடித்தார். இந்த பட்டியலில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 14வது இடத்தில் இருக்கிறார். இவருக்கு ரூ.8.88 கோடி சொத்து இருப்பது தெரியவந்தது. அதன்படி பார்த்தால் முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொத்து மதிப்பு முதல்வர் ஸ்டாலினை விட 5 மடங்கு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications