உங்க வேலையை பாருங்க! எங்க விஷயத்தில் தமிழக தலைவர்கள் தலையிட வேண்டாம்.. டிகே சிவக்குமார் விதண்டாவாதம்
பெங்களூர்: கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான கேள்விக்கு டிகே சிவக்குமார் விதண்டாவாதமாக பதில் அளித்துள்ளார். "தமிழக தலைவர்கள் தங்கள் வேலையை பார்க்கட்டும்.. ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் இன்னொரு மாநிலம் தலையிடக் கூடாது. எங்கள் மாநிலத்தை எப்படி பாதுகாப்பது என்பது எங்களுக்கு தெரியும்" என்று பதிலளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அருகே உள்ள காவிரி வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டதாக கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், சிபிஐ விசாரணை வேண்டும் என்று தமிழக அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் பேட்டியளித்த கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார் கூறியதாவது:-

என்ன செய்ய வேண்டுமென எங்களுக்குத் தெரியும்
"ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் இன்னொரு மாநிலம் தலையிடக் கூடாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த பிரச்சினைகள் இருக்கும். எங்கள் மாநிலத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அவர்கள் (தமிழ்நாடு தலைவர்கள்) தங்கள் வேலையை மட்டும் பார்க்கட்டும். நாங்கள் எங்கள் பணியைச் செய்கிறோம். அவர்களின் நிர்வாகத்தில் தலையிட நான் விரும்பவில்லை. எங்கள் மாநிலத்தின் நாங்கள் காக்க வேண்டும். அவர்கள் தங்கள் பணியைச் செய்யட்டும். நாங்கள் எங்கள் பணியை செய்வோம்" என்றார்.
தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடகா
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அருகே உள்ள காவிரி வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டதாக கூறி தமிழர்கள் மூன்று பேரை கர்நாடக வனத்துறை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகளை தேடியே வனப்பகுதிக்குள் சென்றதாகவும் மான் வேட்டையாடியதாக கர்நாடக வனத்துறை கூறுவது அப்பட்டமான பொய் எனவும் பாதிக்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக எதிர்க்கட்சிகளும் இந்த என்கவுண்டர் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. தமிழக சட்டமன்றத்திலும் இன்று சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பேசிய சட்டமன்ற உறுப்பினர்கள், இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். தமிழக சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், டிகே சிவக்குமார் காட்டமாக இப்படி பேசியுள்ளார்.
கர்நாடக வனத்துறை அமைச்சர் விளக்கம்
கர்நாடக வனத்துறையால் தமிழகர்கள் மூன்று பேர் கொல்லப்பட்டது அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று புயலை கிளப்பியது. இது குறித்து விளக்கம் அளித்து இருந்த கர்நாடக வனத்துறை அமைச்சர், "சாம்ராஜ் நகர் எனவுண்ட்டரில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதில் உள்நோக்கம் எதுவும் இல்லை எனவும் தற்காப்புக்காகவே துப்பாக்கிச்சூடு நடந்தது. வனப்பகுதிக்கு வேட்டைக்கு சென்றவர்கள் வன ஊழியர்களை நோக்கி நாட்டு துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த மோதலில் வன ஊழியர் சிவராஜ் சாசலவாடா என்பவருக்கு காயம் ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகே இரண்டு பைகளில் மான் இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை பார்க்கும் போது இறந்தவர்களின் உறவினர்கள் கூறுவது போல மாடுகளை தேடி வந்தது போல இல்லை. என்கவுண்டர் விவகாரத்தில் வனத்துறையினர் மீது தவறு இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.


Click it and Unblock the Notifications
