தமிழக ஐடி ஊழியர்களின் வேலைக்கு ஆபத்தா? பெங்களூர் IT நிறுவனங்களுக்கு டிகே சிவக்குமார் திடீர் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள ஐடி நிறுவனங்கள் வேண்டும் என்றே கன்னடர்களை வேலைக்கு சேர்க்காமல் தவிர்த்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் டிகே சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடகாவில் உள்ள ஐடி நிறுவனங்கள், கன்னடர்களை பணிக்கு சேர்க்காமல் நிராகரித்துவிட்டு, தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக இளம்பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில், டிகே சிவக்குமார் தனது எக்ஸ் தளத்தில் ஐடி நிறுவனங்களுக்கு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இந்தியாவின் சிலிகான் வாலி என்று அழைக்கப்படுவது பெங்களூர். கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. இந்த ஐடி நிறுவனங்களில் நாடு முழுவதிலும் இருந்து பல ஆயிரக்கணக்கான ஐடி ஊழிர்கள் பணியாற்றி வருகிறார்கள். தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமானவர்களும் பெங்களூர் ஐடி நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள்.

Bangalore

டிகே சிவக்குமார் எச்சரிக்கை

பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் ஐடி நிறுவனங்களில் பணியாற்றி வரக்கூடிய நிலையில், பெங்களூர் ஐடி நிறுவனங்கள் கன்னடர்களை திட்டமிட்டு புறக்கணிப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். கன்னடர்களின் உரிமைகளை தனியார் நிறுவனங்கள் புறக்கணிப்பதை அரசு அனுமதிக்காது என்றும் கூறியுள்ளார்.

பெங்களூர் இளம்பெண் வீடியோ

பெங்களூருரை சேர்ந்த ஒரு இளம் பெண் ஒருவர் வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், "பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தெலுங்கு, தமிழ் மொழி பேசுவோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. சுயவிவரத்தில் தாய்மொழி கன்னடம் என்று குறிப்பிட்டால் வேலை கிடைப்பது இல்லை.

அதேபோல, பெங்களூரில் உள்ள கல்லூரிகளில் வளாக பணி நியமனங்களை மேற்கொள்வதும் இல்லை. வேறு பகுதிகளில் குறைந்த சம்பளத்துக்கு ஆட்களை நியமனம் செய்து கொள்கிறார்கள். இதனால் கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது இல்லை. இந்த பிரச்சினைக்கு கர்நாடக அரசு தீர்வு காண வேண்டும்' என்று கூறியிருந்தார்.

கர்நாடகத்தில் கன்னடர்களே உயர்ந்தவர்கள்

பெங்களூரை சேர்ந்த இளம் பெண் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட இந்த வீடியோ வைரலான நிலையில், இதற்கு அம்மாநில முதல்வர் டிகே சிவக்குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். டிகே சிவக்குமார் அதில் கூறியிருப்பதாவது:- "பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலை கிடைப்பது இல்லை என்று புகார்கள் வருவது வருத்தம் அளிக்கிறது. கர்நாடகத்தில் கன்னடர்களே உயர்ந்தவர்கள்.

அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்

கன்னடர்களின் உரிமை, வாய்ப்புகளை புறக்கணிப்பதை எக்காரணம் கொண்டும் அரசு அனுமதிக்காது. உலகம் பெங்களூரை தகவல் தொழில்நுட்பத்தின் தலைநகராக பார்க்கிறது. கன்னடர்களின் திறமை மீது அபாரமான பெருமை உள்ளது. கன்னடர்களை தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டு புறக்கணிப்பது தெரியவந்தால் அரசு தக்க நடவடிக்கை எடுக்கும். கன்னடர்களின் நலனை காக்க அரசு தயாராக உள்ளது.

முன்னதாக கடந்த 2024 ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை வரைவு மசோதா ஒன்றிற்கு ஒப்புதல் அளித்தது. அதாவது, பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனங்களில் கர்நாடகத்தை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு அளிப்பது கட்டாயம் என்று கூறப்பட்டு இருந்தது. எனினும், தொழில் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+