சித்தராமையா VS டிகே சிவக்குமார்.. முதல்வர் ரேஸில் ட்விஸ்ட்.. எம்எல்ஏக்கள் ஆதரவு யாருக்கு அதிகம்? ஆஹா
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் நாற்காலிக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதிக எம்எல்ஏக்கள் யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களோ? அவர்களுக்கு முதல்வர் பதவி வழங்கப்படும் நிலையில் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோருக்கு எத்தனை பேர் ஆதரவாக உள்ளனர் என்பது பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் பல மாநில தேர்தல்களில் தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வந்த காங்கிரஸ் கட்சி கடந்த ஆண்டு நடந்த இமாச்சல பிரதேச மாநில தேர்தலில் வெற்றி பெற்றது. பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக இப்போது கர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி மெஜாரிட்டியுடன் ஆட்சியை எட்டிப்பிடித்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135, பாஜக 66, ஜேடிஎஸ் 19, மற்றவர்கள் 4 தொகுதிகளில் வென்றன. மொத்தமுள்ள 224 தொகுதிகள் உள்ள நிலையில் மெஜாரிட்டிக்கு 113 இடங்கள் தேவை. ஆனால் கங்கிரஸ் கட்சி அதனை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று பாஜகவிடம் இருந்து ஆட்சியை பறித்துள்ளது.

இந்நிலையில் தான் முதல்வர் பதவிக்கான போட்டியில் மாஜி முதல்வரும், எதிர்க்கட்சி தலைவராகவும் செயல்பட்ட சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி உள்ளது. சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் முதல்வர் பதவியை பெறும் வகையில் லாபி நடத்த டெல்லி சென்றுள்ளனர். இருப்பினும் மாநிலத்தில் அதிக எம்எல்ஏக்களின் ஆதரவு யாருக்கு உள்ளது? என்பதன் அடிப்படையில் தான் முதல்வரை கட்சி மேலிடம் தேர்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக தான் நேற்று முன்தினம் பெங்களூரில் உள்ள தனியார் ஓட்டலில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியினர் 135 பேர் பங்கேற்றனர். மேலும் பல்லாரி ஹரப்பனஹள்ளி தொகுதியில் சுயேச்சையாக வென்ற லதாவும் காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக கூறி பங்கேற்றார். இதன்மூலம் மொத்தம் 136 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது.
இந்த கூட்டத்தின்போது கர்நாடகாவின் அடுத்த முதல்வராக யார் வேண்டும்? என்பது குறித்து ரகசியமாக ஓட்டளிக்க வேண்டும் என மேலிட தலைவர்கள் கூறினர். அதன்படி ரகசிய ஓட்டெடுப்பும் நடந்தது. எம்எல்ஏக்கள் தங்களின் முதல்வராக யார் வர வேண்டும் என்பது தொடர்பாக ஓட்டளித்தனர். இந்த ஓட்டு பெட்டி இன்னும் திறக்கப்படவில்லை. விரைவில் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் தலைமையில் மேலிட தலைவர்கள் திறக்க உள்ளனர்.
இதற்கிடையே தான் தற்போது புதிய விஷயம் வெளியாகி உள்ளது. அதாவது கர்நாடகா முதல்வராக சித்தராமையா தான் வேண்டும் என அதிக எம்எல்ஏக்கள் விரும்புவதாக கூறப்படுகிறது. அதாவது டிகே சிவக்குமாரை விட கூடுதலாக ஒரு மடங்கு எம்எல்ஏக்கள் சித்தராமையாவுக்கு ஆதரவாக உள்ளனர். அதாவது மொத்தம் காங்கிரஸ் கட்சியில் 135 பேர் எம்எல்ஏக்களாக உள்ளனர்.
இதில் சித்தராமையாவுக்கு ஆதரவாக 80 எம்எல்ஏக்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாறாக டிகே சிவக்குமாருக்கு ஆதரவாக 45 எம்எல்ஏக்கள் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவராக உள்ள டிகே சிவக்குமாருக்கு எப்படியும் 50க்கும் அதிகமானவர்களின் ஆதரவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.
மேலும் சித்தராமயைாவுக்கு அதிக எம்எல்ஏக்களின் ஆதரவு எப்படி கிடைத்தது? என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது சித்தராமையா கடந்த முறை 2013 முதல் 2018 வரை மாநிலத்தில் முதல்வராக இருந்தார். அப்போது அவருக்கு பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். அதன்பிறகு சித்தராமையாவின் ஆதரவாளர்கள் நிறையபேர் 2018 தேர்தலில் தோல்வியடைந்தனர். இதனால் தான் அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறிகொடுத்தது.
ஆனால் தற்போது நடந்த தேர்தலில் பல தொகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் போட்டியிட்டு வென்றுள்ளனர். சித்தராமையாவின் ஆதரவாளர்கள் சீனியர் தலைவர்களாக உள்ளதால் அந்த தொகுதிகளில் புதியவர்களை களமிறக்க டிகே சிவக்குமாரால் முடியவில்லை. இதை சாதகமாக பயன்படுத்திய களம்புகுந்த சித்தராமையாவின் ஆதரவாளர்கள் ஏராளமானவர்கள் வெற்றி பெற்றனர். இதுதான் சித்தராமையாவுக்கு பிளஸ் பாயிண்டாக உள்ளது.
இதனை டிகே சிவக்குமாரே உணர்ந்துள்ளார். இதனால் தான் நேற்றைய பேட்டியில், டிகே சிவக்குமார், ‛‛சித்தராமையாவுக்கு தான் அதிக எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. அவருக்கு ஆல் தி பெஸ்ட்'' என கூறியிருந்தார். இருப்பினும் கூட டிகே சிவக்குமார் இன்னும் முதல்வர் ரேஸில் இருந்து விலகவில்லை. இதனால் தான் கட்சி மேலிடத்திடம் எம்எல்ஏக்களின் ஆதரவை விட கட்சி மேலிடமே முதல்வரை தேர்வு செய்ய வேண்டும் என இன்று கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications