‛ப்ரேக்’.. மக்களுக்கான 10 கிலோ இலவச அரிசியை தடுக்கும் மத்திய அரசு! சித்தராமையா பகீர்.. என்னாச்சு?
பெங்களூர்: கர்நாடகாவில் 10 கிலோ இலவச அரிசி திட்டத்தை அமல்படுத்தவிடாமல் தடுக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதன்மூலம் காங்கிரஸ் அரசுக்கும், கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது என கர்நாடகா முதல்வர் சித்தராமையா பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார். அப்படி அங்கு என்ன நடந்தது?.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியடைந்து. காங்கிரஸ் கட்சி அங்கு வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்றார். இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு அந்த கட்சியின் 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் தான் மிகவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அதன்படி க்ருஹ லட்சுமி திட்டத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை, க்ருஹ ஜோதி திட்டத்தில் வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம், அன்னபாக்யா திட்டத்தில் 10 கிலோ அரசி இலவசம். பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம், யுவநிதி டிகிரி முடித்து வேலையில்லாதவர்களுக்கு ரூ.2000, டிப்ளமோ முடித்து வேலையில்லாதவர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த 5 திட்டங்கள் காங்கிரஸ் வெற்றிக்கு மிகவும் கைக்கொடுத்தன.
இதில் தற்போது பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டத்தை கர்நாடகா அரசு செயல்படுத்தி உள்ளது. அடுத்த மாதம் முதல் அன்னபாக்யா திட்டத்தில் 10 கிலோ இலவச அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்த திட்டத்தை செயல்படுத்த விடாமல் மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளதாக முதல்வர் சித்தராமையா பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதுபற்றி சித்தராமையா கூறியதாவது:
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் 5 முக்கிய திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று தேர்தல் வாக்குறுதிகளாக மக்களிடம் கூறினோம். அதன்படி அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை தொடங்கி உள்ளோம். இதையடுத்து அன்னபாக்ய திட்டத்தின் கீழ் அந்தியோதயா ரேஷன் கார்டுகளுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தற்போது இந்த திட்டத்தில் 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன் கூடுதலாக 5 கிலோ அரிசி சேர்த்து 10 கிலோ வழங்க முடிவு செய்துள்ளோம்.
தற்போதைய அறிவிப்பின்படி கூடுதலாக வழங்கப்படும் 5 கிலோ அரிசிக்காக மாதம் 2 லட்சத்து 8 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி மாநிலத்துக்கு தேவையாக உள்ளது. ஒரு கிலோ அரிசி விலை ரூ.34 ஆகவும், போக்குவரத்து செலவுக்காக 2 ரூபாய் 60 காசு செலவாகும். அதன்படி பார்த்தால் அன்னபாக்யா திட்டத்துக்கு மாதம் ரூ.840 கோடி செலவாகும். ஆண்டுக்கு ரூ.10 ஆயிரத்து 92 கோடி தேவையாகும்.
தற்போது மாநில அரசு சார்பில் 5 கிலோ அரிசி வழங்குவதில் எந்த தட்டுப்பாடும் இல்லை. ஆனால் கூடுதலாக தேவைப்படும் 5 கிலோ அரிசியை மத்திய அரசிடம் இருந்து வாங்க கர்நாடக அரசு முடிவு செய்திருந்தது. இதற்காக மத்திய உணவு கழகத்தின் துணை மேலாளரிடம் ஆலோசனை செய்திருந்தோம். உணவு வினியோகத்துறை அமைச்சர் முனியப்பாவிடம் தேவையான அரிசி வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. இருப்பினும் கூட முறைப்படி ஜூன் 12ம் தேதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.
அதோடு ஜூலை 1ம் தேதியில் இருந்து அன்னபாக்ய திட்டத்தின் கீழ் 10 கிலோ அரிசி வழங்குவோம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே தான் கர்நாடகத்தின் இலவச அரிசி வழங்கும் திட்டத்தில் மத்திய பா.ஜனதா அரசு அரசியல் செய்ய தொடங்கி உள்ளது. முதலில் கர்நாடகத்திற்கு 2 லட்சத்து 8 ஆயிரத்து 425 மெட்ரிக் டன்அரிசி தருவதற்கு ஒப்புக் கொண்ட மத்திய அரசு தற்போது திடீரென்று, அரிசி வழங்க இயலாது என்று தெரிவித்துள்ளது. கர்நாடகத்திற்கு அரிசி தர மறுக்கிறது.
இதன்மூலம் கர்நாடகத்திற்கு அரிசி தரக்கூடாது என்ற முடிவை எடுத்து மத்திய அரசு அரசியல் செய்கிறது. அதோடு காங்கிரஸ் அரசுக்கும், கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது. இருப்பினும் நாங்கள் இந்த திட்டத்தை கைவிடுவதாக இல்லை. பிற மாநிலங்களில் இருந்து அரிசி வாங்கி திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். தமிழக அரசிடம் இதுபற்றி பேசியுள்ளோம். அவர்கள் இன்னும் உறுதியான பதில் தராத நிலையில் தெலங்கானா அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம். இதையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை என்பது எடுக்கப்படும்'' என்றார்.
இதற்கிடையே தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல் அன்னபாக்யா திட்டத்தில் இலவசமாக 10 கிலோ அரசியை வழங்காத பட்சத்தில் மாநிலம் முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என பாஜக தரபரபி்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications